முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: முக்கிய குற்றவாளி உள்பட 3 பேர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2024      தமிழகம்
Kallakurichi 2024-06-21

Source: provided

சென்னை : கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் முக்கிய குற்றவாளி உட்பட 3 பேரை மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 18-ம் தேதி நள்ளிரவு முதல் 100-க்கும் மேற்பட்டோா் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்துள்ளனர். இதில் 19-ம் தேதி அதிகாலை முதல் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 

இதையடுத்து அவா்கள் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிலா் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா், சேலம், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 57ஆக உயா்ந்துள்ளது. 

இந்நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் முக்கிய குற்றவாளி உள்பட மேலும் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.  சென்னை எம்.ஜி.ஆர். நகரில் பதுங்கியிருந்த சிவகுமார் என்ற முக்கிய குற்றவாளியை மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.  தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், விஷச் சாராயம் தயாரிக்க மெத்தனால் விநியோகம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.  

மேலும் இந்த சம்பவத்தில்  முக்கிய குற்றவாளியான மாதேஷ் நண்பர்கள் சக்திவேல் மற்றும் மீன் வியாபாரி கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாதேஷ்க்கு மெத்தனால் கடத்த உதவியதாக சக்திவேல் மற்றும் கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார்  தெரிவித்துள்ளனர்.   இந்த வழக்கில் இதுவரை 10 பேரை கைது செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து