முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குளு குளு சீசன்: குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2024      தமிழகம்
Kurdalam 2023 06 20

Source: provided

தென்காசி : மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் நிலவும் குளுகுளு சீசனை தொடர்ந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். 

 தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் குற்றாலம் அருவிகளை ஒட்டிய பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. 

இதனால் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் மிதமாக விழுகிறது. 

இதனால் அதில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால், வெளியூர் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்பட்டது.

மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் குற்றாலம் பகுதிகளில் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. 

அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து மகிழ்ந்தனர்.  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்யும் பட்சத்தில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க அங்கு அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து