முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூலை 11-ல் தருமபுரியில் அரசு விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2024      தமிழகம்
Stelin 2022 03 05

Source: provided

தருமபுரி : தருமபுரியில் நடைபெறும் அரசு விழாவில்  பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகள் மற்றும் புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஜூலை 11-ம் தேதி தருமபுரி செல்லவுள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த விழாவுக்கு மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிக்கான இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களை கலெக்டர் சாந்தி தலைமையிலான அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர். அதன்படி நல்லம்பள்ளி ஒன்றியம்பாளையம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விழா மேடை மற்றும் பிரம்மாண்ட பந்தல் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் கலெக்டர் சாந்தி மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, உதவி கலெக்டர் காயத்ரி, தாசில்தார் பார்வதி ஆகியோர் அந்த பள்ளியில் போதுமான இடம் வசதி உள்ளதா? என்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.அப்போது முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைசாமி, மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் நட்ராஜ், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் கவுதம், பிளாஸ்டிக் செல்வம், நவீன் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து