முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்கிரவாண்டி தொகுதியில் நாளை பிரச்சாரத்தை தொடங்குகிறார் சீமான்

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2024      தமிழகம்
Seeman 2024-03-22

Source: provided

சென்னை : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அங்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து நாளை முதல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 

விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

அ.தி.மு.க. தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கூட்டணி கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பா.ம.க. வேட்பாளரான சி.அன்புமணி முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஏற்கனவே ஆதரவு திரட்டியுள்ளார். அவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.  இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. 

இந்த வார இறுதியில் இருந்து தேர்தல் களம் மேலும் களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்ற கூட்டத்தொடர் வருகிற 29-ம் தேதி முடிவடைந்த பின்னர் அடுத்த வாரம் முழுவதும் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் நாளை  முதல் விக்கிரவாண்டி தொகுதியில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து