முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற 18-வது மக்களவையின் தற்காலிக சபாநாயகராக மஹ்தாப் பதவியேற்றார்: நிகழ்ச்சியை புறக்கணித்த இன்டியா கூட்டணி

திங்கட்கிழமை, 24 ஜூன் 2024      இந்தியா
Parthruhari-Mahatab 2024-06

புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.பி. பர்த்ருஹரி மஹதாப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பதிவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

8 முறை எம்.பி.யாக இருந்த கேரளாவின் கொடிகுன்னில் சுரேஷை இடைக்கால சபாநாயகராக நியமிக்காமல், 7 முறை எம்பியாக இருந்த பர்த்ருஹரி மஹதாப்பை இடைக்கால சபாநாயகராக அறிவித்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்டியா கூட்டணி எம்.பி.க்கள் இவ்விழாவை புறக்கணித்தனர்.

பாராளுமன்றத்தின் 18-வதுமக்களவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. கடந்த 9-ம் தேதி, நாட்டின் பிரதமராக மோடி 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து, புதிய மக்களவையின் முதல் கூட்டம் ஜூன் 24-ம் தேதி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.பி. பர்த்ருஹரி மஹதாப் நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரெளவுபதி முர்மு பிறப்பித்தார்.

இந்நிலையில், 18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று (திங்கள்கிழமை) தொடங்கியது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இடைக்கால சபாநாயகராக பர்த்ருஹரி மஹதாப்புக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

எனினும், இந்த விழாவை இன்டியா கூட்டணி எம்.பி.க்கள் புறக்கணித்தனர். 8 முறை எம்பியாக இருந்த கேரளாவின் கொடிகுன்னில் சுரேஷை இடைக்கால சபாநாயகராக நியமிக்காமல், 7 முறை எம்பியாக இருந்த பர்த்ருஹரி மஹதாப்பை இடைக்கால சபாநாயகராக அறிவித்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்டியா கூட்டணி எம்.பி.க்கள் இவ்விழாவை புறக்கணித்தனர்.

இடைக்கால சபாநாயகராக பொறுப்பேற்ற கொண்ட பர்த்ருஹரி மஹதாப் நேற்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும், பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, மற்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். நேற்று மொத்தம் 280 உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இன்று மீதமுள்ள 263 உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொள்கின்றனர்.

இதைத் தொடர்ந்து 26-ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெறும். 27-ம் தேதி இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்ற உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து