முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது

திங்கட்கிழமை, 24 ஜூன் 2024      தமிழகம்
Jail

Source: provided

ஊட்டி : நீலகிரியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட போலீஸ்காரர் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளார். 

தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிக அளவில் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வந்தனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டு, அவர்களுடைய வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன. அப்படி இருந்தும் கஞ்சா புழக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.  இதற்கிடையே போலீசார் உதவியில்லாமல் கஞ்சா வியாபாரம் நடைபெற வாய்ப்பு இல்லை என ஐகோர்ட்டு தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஏற்றார் போல் பல இடங்களிலும் கஞ்சா விற்பனைக்கு போலீசார் உதவி செய்து வந்த சம்பவங்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அதேபோல் வேலியே பயிரை மேய்ந்த கதையாக தற்போது நீலகிரி மாவட்டத்தில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வெல்வார்பேட்டை முத்தன்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 29). இவர் கடந்த 2020-ம் ஆண்டு போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார். 14-வது பழனி பட்டாலியன் பிரிவில் உள்ள இவர் தற்போது நீலகிரி மாவட்டம் பில்லூர் அணை பாதுகாப்பு பணியில் உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாபிரியா, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமாரியம்மாள் தலைமையிலான போலீசார் ஊட்டி பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த சவுந்தரராஜனிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார். அப்போது அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் விற்பனைக்காக 200 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது. 

விசாரணையில் நீலகிரிக்கு பணிக்கு வந்த கடந்த 4 மாதங்களாக தேனியில் இருந்து கஞ்சா கடத்தி வந்து நீலகிரியில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். நீலகிரியில் போலீஸ்காரரே கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து