முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரான்சில் உள்நாட்டு போர் வெடிக்கும் : அதிபர் மேக்ரான் எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2024      உலகம்
Macron 2024-06-25

Source: provided

பாரீஸ் : பிரான்சில் பாராளுமன்ற தேர்தலில்  வலதுசாரிகளுக்கும்,  இடதுசாரிகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள  போட்டி  உள்நாட்டுப் போர் ஏற்பட வழிவகுக்கும் என்று அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

உலகின் புவிசார் அரசியல் போர்களுக்கிடையிலும் பதற்றங்களுக்கு இடையிலும் குழம்பிக் கிடைக்கும் நிலையில்  மேற்கு ஐரோப்பிய நாடான பிரான்சில் வலதுசாரி கட்சியைச் சேர்ந்த அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சமீபத்தில் பிரான்ஸ் பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டு அவசர தேர்தலை அறிவித்தார்.

முன்னதாக நடந்த ஐரோப்பிய யூனியன் தேர்தலில் பிரான்சில் இடதுசாரிகள் வென்றது  வலதுசாரிகளுக்கு பலத்த அடியாக அமைந்த நிலையில் இந்த முடிவை மேக்ரான் எடுத்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.  

மேக்ரான் அறிவித்தபடி வரும்  30-ம் தேதி தொடங்கி ஜூலை 7 வரை பிரான்சில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வலதுசாரியான நேஷனல் ரேலி கட்சிக்கும் இடதுசாரியான நியூ பாப்புலர் முன்னணி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து பிரான்சில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது பாட் காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய  இம்மானுவேல் மேக்ரான், பிரான்சில் தீவிர வலதுசாரிகளுக்கும், தீவிர இடதுசாரிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள இந்த போட்டி தேர்தல் என்பதையும் தாண்டி உள்நாட்டுப் போர் ஏற்பட வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார். 

இரண்டு பிரிவினருக்கிடையேயான இந்த கருத்து மோதல் வெறுப்பாக வளர்வதால் இந்த உள்நாட்டுபோர் ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து