முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓய்வை அறிவித்த ஜான் சீனா

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜூலை 2024      விளையாட்டு
Subman-Gill 2023-09-06

Source: provided

டபுள்யூடபுள்யூஇ மல்யுத்த போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்களில் குறிப்பிடத்தக்க ரசிகர்களை கொண்டவர் ஜான்சீனா. அவர் களத்திற்குள் எண்ட்ரி கொடுக்கும் ஸ்டைல் மிகவும் பிரபலம் ஆகும். 16 முறை டபுள்யூடபுள்யூஇ சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் ஜான் சீனா. இந்நிலையில் டபுள்யூடபுள்யூஇ போட்டிகளில்  இருந்து ஓய்வு பெறுவதாக ஜான் சீனா அறிவித்துள்ளார். கனடா நாட்டின் டொரோண்டோவில் நடைபெற்ற 'மணி இன் தி பேங்க்' (Money in the Bank) போட்டியில் திடீரென தோன்றிய ஜான் சீனா தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 47 வயதாகும் ஜான் சீனா ஓய்வு அறிவிப்பை தெரிவிக்கும்போது சுற்றியிருந்த கூட்டத்தினர் ஓய்வு பெறவேண்டாம் என்று கூச்சலிட்டனர். 

2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ராயல் ரம்பிள், எலிமினேஷன் சேம்பர் மற்றும் ரெசில்மேனியா 41-ல் தான் போட்டியிட போவதாகவும் இந்த போட்டிகளோடு டபுள்யூடபுள்யூஇ போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போகிறேன் என்று ஜான் சீனா அறிவித்தார். இதன்படி 2025-ம் ஆண்டின் துவக்கத்தில் அவர் ஓய்வு பெற உள்ளார். மல்யுத்த போட்டிகள் மட்டுமின்றி பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் ஜான் சீனா நடித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற ஆஸ்கார் விழாவில், சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை அறிவிக்க ஆடை இல்லாமல் ஜான் சீனா மேடையில் தோன்றிய சம்பவத்திற்கு கலவையான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் தெரிவிக்கப்பட்டது. ஜான் சீனாவின் ஓய்வு குறித்த அறிவிப்பு, அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சுப்மன் கில்லுக்கு பாராட்டு

இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஒரே நேரத்தில் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது, இந்திய டி20 கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கலாம் என தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன. இப்படியான நிலையில் இந்திய கிரிக்கெட்டில் எதிர்காலத்தை பற்றி பயப்படத் தேவையில்லை என ஜிம்பாப்வே முன்னாள் வீரர் ஆண்டி ப்ளவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் ஐ.பி.எல் அணிக்கு பயிற்சியாளரான பிறகு எல்லா வீரர்களையும் கவனிக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு. இந்த வகையில் நான் கவனித்ததில் 5 இந்திய இளம் வீரர்கள் சிறப்பாக இருக்கிறார்கள். ஜெய்ஸ்வால் டி20 உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்றாலும் அவர் அருமையான வீரர்.

சுப்மன் கில்லுக்கு இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் சிறப்பாக அமையவில்லை என்றாலும், அவர் புத்திசாலித்தனமாக தெரிகிறார். அவர் விராட் கோலி போலவே விளையாடுகிறார். இதேபோல் நான் அபிஷேக் ஷர்மா எப்படி செயல்பட உள்ளார்? என்று பார்க்க விரும்புகிறேன். துருவ் ஜூரெல் எனக்கு மிகவும் பிடித்த வீரர். அவரை நான் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பார்த்தேன். அதில் மிகவும் சிறப்பாக விளையாடினார். மேலும் சர்வதேச கிரிக்கெட் விளையாடுவதற்கான திறன் ரியான் பராக்கிடம் இருக்கிறது. எனவே இந்த ஐந்து வீரர்கள் இந்திய எதிர்கால வீரர்களாக இருப்பார்கள். தற்போது இந்திய அணியில் ஓய்வு பெற்ற வீரர்கள் மிகவும் தரமான வீரர்கள். ஆனால் அதே சமயத்தில் இந்திய கிரிக்கெட்டில் இப்படியான வீரர்கள் ஓய்வு பெற்றாலும் அவர்களுக்கான மாற்று (ரெடிமேடான) வீரர்கள் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து