முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வை தற்போது வடமாநில தலைவர்களே எதிர்த்து வருகின்றனர்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

திங்கட்கிழமை, 8 ஜூலை 2024      தமிழகம்      அரசியல்
Udayanidhi 2024-07-08

விழுப்புரம், நீட் தேர்வை தற்போது வடமாநில தலைவர்களே எதிர்த்து வருகின்றனர் என்று விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின் இறுதிநாளான நேற்று அமைச்சர் உதயநிதி நேற்று காலை தும்பூர் பகுதியில் திறந்த வேனில் தேர்தல் பிரசாரம் செய்தார். பிரசாரத்தில் அவர் பேசியதாவது:- விக்கிரவாண்டி தொகுதி முழுவதும் சுற்றி சுற்றி அன்னியூர் சிவாவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகிறேன். உதயசூரியன் வாக்கு பெட்டியில் எப்படி முதல் இடத்தில் இருக்கிறதோ, அதேபோல வாக்கு எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருக்க வேண்டும்.

பாராளுமன்றத் தேர்தலின்போது முதல்வர் 40 பாராளுமன்ற தொகுதிக்குச் சென்று வாக்கு கேட்டு இன்டியா கூட்டணி ஜெயிக்க வேண்டும் என பிரசாரம் செய்தவர்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின். பிரதமர் மோடி, 7, 8 முறை தமிழ்நாட்டுக்கு பிரசாரத்திற்கு வந்தார். நீங்கள் ஆயிரம் முறை வந்தாலும் சரி தமிழ்நாட்டில் உங்களால் காலூன்ற முடியாது. தமிழ்நாட்டு மக்கள் உங்களுக்கு அந்த இடத்தை தர மாட்டார்கள். அன்னியூர் சிவாவை குறைந்தது ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

தி.மு.க. எந்த தேர்தலை சந்தித்தாலும் தமிழக மக்கள் வெற்றியை கொடுத்து வருகிறீர்கள். 3 ஆண்டு முன்பு தி.மு.க. ஆட்சி அமைந்தால் பெட்ரோல் விலை குறைப்பேன் என முதல்வர் தெரிவித்தார், ஆட்சி அமைந்த உடன் பெட்ரோலுக்கு ரூ.3 குறைத்தார். பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்தார். விழுப்புரம் மாவட்டத்தில் 10 ஆயிரம் மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் மூலம் பயன் பெற்றிருக்கிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தின் மூலம் 3 லட்சம் மகளிர் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்றுவருகின்றனர்.

இன்றைக்கு அனைத்து வட மாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார்கள். 7 வருடத்திற்கு முன்பு இந்த நீட் தேர்வு ரத்து செய்யக்கோரியது தி.மு.க. தான். இன்று வட மாநில தலைவர்கள் புரிந்து கொண்டு தற்போது நீட் தேர்வை எதிர்த்து வருகின்றனர். நீட் தேர்வு நடத்தும் கட்சியான பா.ஜ.க.வுடன் சேர்ந்து பா.ம.க. தேர்தல் கூட்டணி அமைத்திருக்கிறது எனவே அவர்களை நிராகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து