முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி., ஹாத்ரஸ் துயர சம்பவம்: துணை ஆட்சியர் உள்பட 6 அதிகாரிகள் சஸ்பெண்ட்

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2024      இந்தியா
UP 2024-07-02

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம், புல்ராய் கிராமத்தில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் கடந்த 2-ஆம் தேதி நடைபெற்ற ஆன்மிக குரு ‘போலே பாபா’வின் சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 போ் உயிரிழந்தனா். இந்த நிலையில், ஹாத்ரஸில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 போ் உயிரிழந்த சம்பவத்தில் சிறப்பு விசாரணைக் குழு உத்தரபிரதேச மாநில அரசிடம் விசாரணை அறிக்கையை நேற்று (ஜூலை 9) சமர்ப்பித்துள்ளது. விசாரணை அறிக்கையின்படி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் செய்த தவறே கூட்ட நெரிசல் ஏற்பட முக்கிய காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 2 லட்சம் பேர் திரண்டிருந்த நிகழ்ச்சிக்கு, 80,000 பேர் மட்டுமே பங்கேற்கப் போவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனுமதி பெற்றிருந்ததும், அதற்கான அனுமதியை அதிகாரிகள் வழங்கியிருப்பதும் இந்த விபத்துக்கான முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த துயரத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது உத்தர பிரதேச அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. துணை ஆட்சியர் சிக்கந்தர் ராவ் உள்பட 6 அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சாமியார் போலே பாபா என்றழைக்கப்படும் நாராயண் சகார் ஹரி(சூரஜ் பால்) மீது இருநபர் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழு குற்றச்சாட்டுகளை எழுப்பவில்லை என்பது கவனிக்கத்தக்க அம்சமாய் விசாரணை அறிக்கையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் தேவ்பிரகாஷ் மதுகர் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை தொடருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து