முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று 3-வது டி-20 போட்டி: ஜிம்பாப்வேக்கு எதிரான இந்திய அணியின் வெற்றி தொடருமா..?

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2024      விளையாட்டு
India-1 2024-07-09

Source: provided

ஹராரே : இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஜெய்ஸ்வால் இணைந்துள்ள நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்தியாவின் வெற்றி தொடருமா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்று நடக்கும் 3-வது டி-20 போட்டியில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

1-1 என்ற சமநிலை... 

சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் தொடரில் 2 போட்டி முடிவில் 1-1 என்ற சமநிலை காணப்படுகிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 13 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது. 2-வது போட்டியில் இந்தியா 100 ரன் வித்தியா சத்தில் அபார வெற்றி பெற்றது.

அதிரடி தொடருமா? 

இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் ஆட்டம் ஹராரேயில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இந்த போட்டியிலும் இந்திய அணி அதிரடி தொடருமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும், பந்துவீச்சில் ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், அவேஷ் கான் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். கடந்த போட்டியில் இந்திய அணி 234 ரன் குவித்து இருந்தது. இந்த போட்டியிலும் வென்று இந்தியா முன்னிலை பெறும் வேட்கையில் உள்ளது.

11-வது ஆட்டம்... 

சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இருக்கிறது.இரு அணிகளும் இன்று மோதுவது 11-வது ஆட்ட மாகும். இதுவரை நடந்த 10 போட்டிகளில இந்தியா 7-ல், ஜிம்பாப்வே 3-ல் வெற்றி பெற்றுள்ளன. இன்றைய போட்டி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணியுடன் ஜெய்ஸ்வால், சஞ்சுசாம்சன், ஷிவம்துபே ஆகியோர் இணைந்துள்ளனர்.

முதல் 2 போட்டி... 

வெஸ்ட்இண்டீசில் 20 ஓவர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த இவர்கள் 3 பேரும் நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஜிம்பாப்வே தொடரில் முதல் 2 போட்டியில் இவர்கள் இடம் பெற முடியவில்லை. தற்போது அவர்கள் இந்திய அணியில் இணைந்து உள்ளதால் சாய்சுதர்சன், ஹர்ஷித் ரானா, ஜிதேஷ் சர்மா ஆகியோர் நாடு திரும்புகிறார்கள். இவர்கள் முதல் 2 போட்டிகளுக்கு மட்டும் அணியில் சேர்க்கப்பட்டு இருந்தனர். இதில் சாய்சுதர்சன் 2-வது 20 ஓவர் போட்டியில் அறிமுகமாகி இருந்தார். ஆனால் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து