முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹிஜாப் அணிய மறுப்பு: துருக்கி விமான நிறுவனத்தை மூடிய ஈரான்

புதன்கிழமை, 10 ஜூலை 2024      உலகம்
Iran 2024-07-10

Source: provided

டெக்ரான் : டெக்ரானில் உள்ள துருக்கி ஏர்லைன்ஸ் விமான நிறுவன அலுவலகத்தில் பணியாற்றும் ஈரான் நாட்டை சேர்ந்த பெண்கள் ஹிஜாப் அணியாமல் பணி செய்வதாக கிடைத்த தகவலை தொடர்ந்து  அந்த நிறுவனத்தை ஈரான் அரசு மூடியுள்ளது. 

ஈரான் நாட்டில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது. 

இந்த நிலையில் தலைநகர் டெக்ரானில் உள்ள துருக்கி ஏர்லைன்ஸ் விமான நிறுவன அலுவலகத்தில் பணியாற்றும் ஈரான் நாட்டை சேர்ந்த பெண்கள் ஹிஜாப் அணியாமல் பணி செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து அந்த அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர். 

அந்த சோதனையில் அப்போது பெண் ஊழியர்கள் ஹிஜாப் அணியாமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து துருக்கி விமான நிறுவன அலுவலகத்தை ஈரான் அரசு மூடியுள்ளது. அந்த அலுவலகத்துக்கு போலீசார் சீல் வைத்தனர். 

இது தொடர்பாக அந்நாட்டு ஊடகம் ஒன்றில், துருக்கி ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்கு போலீஸ் அதிகாரிகள் சென்று ஊழியர்கள் ஹிஜாபை கடைப்பிடிக்காதது குறித்து முதல் எச்சரிக்கை விடுத்தனர். 

ஆனால் ஊழியர்கள் போலீஸ் அதிகாரிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர். இதனால் அந்த அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து துருக்கி ஏர்லைன்ஸ் உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து