முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதி

புதன்கிழமை, 10 ஜூலை 2024      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி : தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் முதல்வர்  கருணாநிதியின் நினைவு நாணயத்திற்கு மத்திய நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை அரசு கெஜட்டில் விரைந்து வெளியிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான தி.மு.க.வின் தலைவருக்காக முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு விரும்பியது. 

இதற்காக, ரூ. 100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி மத்திய நிதியமைச்சகத்திடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு சார்பில் கடந்த வருடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.  

இந்த நாணயத்தை, கடந்த ஜுன் 3-ம் தேதி  கருணாநிதியின் நூறாவது பிறந்தநாளில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. பல்வேறு காரணங்களால் இந்த நாணயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் இருந்தது. 

இதன் பின்னணியில் நாணயத்திற்கான நடைமுறைகள் முடிவடையாதது காரணமாக கூறப்பட்டது. தற்போது இவை அனைத்தும் முடிந்து  நாணயத்திற்கான அனுமதியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையெப்பமிட்டதாகத் தெரிகிறது.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாணயத்துடன், மேலும் இரண்டுநாணயத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இதில், சுப்ரீம் கோர்ட்டின் 75-வது ஆண்டு விழா மற்றும் மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் நூற்றாண்டு விழாவிற்கான நினைவு நாணயங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், முன்னாள் முதல்வர்களான காமராஜர், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட தமிழகத்தின்  தலைவர்கள், பல்வேறு கலைஞர்கள் உள்ளிட்டோர் மீதான பல நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

மு.கருணாநிதி உட்பட மூன்று நாணயங்கள் குறித்த உத்தரவை மத்திய அரசின் கெஜட்டிலும் விரைவில் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.  இந்தி மற்றும் ஆங்கிலத்தில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி என்ற பெயருடன், தமிழ் வெல்லும் எனும் வாசகம் அவரது நினைவு நாணயத்தில் இடம்பெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து