முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.ல் பால் லாரி மீது டபுள் டெக்கர் பஸ் மோதிய விபத்தில் 18 பேர் பலி : ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல்

புதன்கிழமை, 10 ஜூலை 2024      இந்தியா
UP 2024-07-10

Source: provided

உன்னாவ் : உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் லக்னோ -ஆக்ரா விரைவுச் சாலையில் டபுள் டெக்கர் பேருந்து ஒன்று , பால் லாரி மீது மோதிய விபத்தில் சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், பாங்கர்மாவ் வட்ட அதிகாரி அரவிந்த் சவுராசியா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

விபத்துக்குள்ளான டபுள் டெக்கர் பேருந்தில் பயணித்த 19 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று அதிகாலை 5.15 மணியளவில் நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். 

இச்சம்பவம் குறித்து  உத்தர பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக் கூறுகையில்,  இந்த சம்பவத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 19 பேர் காயமடைந்து உன்னாவ் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  காயமடைந்தவர்கள் உயர்மட்ட மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். 

உன்னாவ் அருகே உள்ள அனைத்து மருத்துவமனைகளும் சிகிச்சை அளிப்பதற்கு தயார் நிலையில் உள்ளன. நான் வந்து அனைத்து ஏற்பாடுகளையும் பார்த்து வருகிறேன், விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும். காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பதே எங்கள் முன்னுரிமை என்று  கூறினார்.  

இந்த சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் லக்னோ-ஆக்ரா விரைவு சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த விபத்தில்  பலியானவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து