முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டவிரோத உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை : டெல்லியில் பெண் டாக்டர் உட்பட 7 பேர் கைது

புதன்கிழமை, 10 ஜூலை 2024      இந்தியா
Doctors 2023 04 11

Source: provided

புதுடெல்லி : சட்டவிரோதமாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட பெண் டாக்டர் உட்பட 7 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

டெல்லியில் முறைகேடாக உடல் உறுப்புகள் பெற்று ஆபரேஷன் நடந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ரகசிய தகவலின் பேரில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார், கடந்த 2 மாத காலம் ரகசிய புலன் விசாரணை நடத்தியதில் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

வங்காள தேசத்தில் இருந்து ஏழை எளிய மக்களிடம் முறைகேடாக உடல் உறுப்புகளை தானம் பெற்றும், விலைக்கு வாங்கியும் ரகசிய ஆபரேஷன்கள் நடந்துள்ளன. ஆபரேஷன் செய்து கொண்ட நபர்களும் பெரும்பாலும் வங்காள தேசத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். 

ஆனால் ஆபரேஷன் மட்டும் டெல்லியில் நடந்துள்ளது. போலியாக ஏதாவது ஒரு அறுவை சிகிச்சை என்று சான்றிதழ் தயாரிக்கப்பட்டு முறைகேடாக ஆபரேஷன்கள் நடந்துள்ளன. 

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான பெண் டாக்டர் ஒருவர் இதில் முக்கிய பங்காற்றி உள்ளார். தென்கிழக்கு டெல்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சைகள் நடந்துள்ளன. 

நொய்டாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் இந்த டாக்டர், இங்கு வருகை ஆலோசகராக வந்து சிகிச்சை செய்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 

2021-2023 ஆண்டு காலத்தில் பல ஆபரேஷன்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக அந்த பெண் டாக்டர், அவரது உதவியாளர் மற்றும் ஒரு இந்தியர் மேலும் 3 வங்காள தேச நபர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து