முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி ரயில் சந்திப்பில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், ரொக்கம் பறிமுதல்

புதன்கிழமை, 10 ஜூலை 2024      தமிழகம்
Trichy-Junction

திருச்சி, திருச்சி ரயில் சந்திப்பில், ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் ரொக்கப் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னையிலிருந்து திருச்சி வந்த மங்களூர் விரைவு ரயிலில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணம் கொண்டு வரப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை செய்தனர்.

அதில், மதுரையைச் சேர்ந்த லட்சுமணன் என்பவருடைய பையில் பல கோடி ரூபாய் பணம், தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வணிக வரித்துறையினர் மூலம் தங்கம் மற்றும் பணத்தை கணக்கிடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக, ரூ.15.5 லட்சம் ரொக்கப் பணம், தங்க நகைகளின் மதிப்பு ரூ.1.89 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.ஹவாலா பணமா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் கொண்டு வரப்பட்ட பணமா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து