முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெலன்ஸ்கியை புடின் என்று கூறி மேடையில் ஜோபைடன் உளறல்: டிரம்பை துணை அதிபர் என்றும் கூறினார்

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2024      உலகம்
Joe-Biden-2024-07-12

வாஷிங்டன், அமெரிக்காவில்  நடந்த நேட்டோ அமைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ரஷ்ய அதிபர் புடின் என மேடையில் ஜோ பைடன் அறிமுகப்படுத்தி வைத்தது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோபைடனின் செயல்களும், பேச்சும் சமீப காலமாக பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. 

மீண்டும் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக நிற்கும் 81 வயதாகும் ஜோ பைடன் பேச்சில் தென்படும்  தடுமாற்றமும், குழப்பமும் அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சமீபத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான  டிரம்புடன் நேருக்கு நேர் நடந்த விவாத நிகழ்ச்சியில் ஜோ பைடனின் உரையில் அதிக இடத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது.  

சில நொடிகளுக்கு எந்த அசைவுமின்றி ஜோ பைடன்  உறைந்து நின்ற சம்பவமும் நடந்தது. அதைத் தொடர்ந்து ஜோ பைடன் மீண்டும் அதிபர் தேர்தலில் நிற்க வேண்டுமா என அவரது கட்சிக்குள்ளேயே கூச்சல் குழப்பங்கள் எழுந்துள்ளன. 

இந்த நிலையில் தான் ஒருபோதும் தேர்தலில் இருந்து பின் வாங்கப் போவதில்லை என்று பைடன் உறுதியாக நிற்கிறார். ஆனால் பைடனின் பேச்சில்  உள்ள தடுமாற்றம் குறைந்தபாடில்லை. நேற்று முன்தினம் அமெரிக்காவில்  நடந்த நேட்டோ அமைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ரஷ்ய அதிபர் புடின் என மேடையில் ஜோ பைடன் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். இந்த வீடியோ  வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்த நிலையில் நேற்று நடந்த பிக் பாய் கருத்தரங்கத்தில்  துணை அதிபர் காமலா ஹாரிஸ் என்று சொல்வதற்கு பதிலாக துணை அதிபர் டிரம்ப் என்று ஜோ பைடன்  குறிப்பிட்டுள்ள வீடியோவும் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.      

இந்த  சம்பவத்தை சுட்டிக்காட்டி  பைடனின் தடுமாற்றம் குறித்து டிரம்ப் விமர்சித்துள்ளார். இதற்கிடையில் தன்மீதான சந்தேகங்களை நீக்க மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் நரம்பியல் பரிசோதனைக்கும் தான் தயார் என்று பைடன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து