முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்: சி.பி.ஐ. வழக்கில் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2024      இந்தியா
Kejrival 2024-01-05

புது டெல்லி, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆனால் சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் அவரது நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத் துறை தன்னை கைது செய்தது தவறு என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் வழங்கப்பட்டது. அதில் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

டெல்லி யூனியன் பிரதேசத்தில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ரூ. 2,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 

இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 9 முறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை. அமலாக்கத் துறையின் பல்வேறு சம்மன்களை நிகராகரித்த பின்னர் கடந்த மார்ச் 21-ம் தேதி கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். 

தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கெஜ்ரிவால், அமலாக்கத் துறை தன்னை கைது செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கின் மீதான தீர்ப்பை, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று வழங்கியது.

அதன்படி, தீர்ப்பின் போது நீதிபதிகள், 90 நாட்களுக்கு மேல் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் துயரப்பட்டிருக்கிறார். பிணையில் ஒருவர் வெளியில் வருவதற்கும், அவர்களிடம் விசாரணை நடத்துவதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. 

பிணை கிடைத்து வெளியே வந்தால் அவரிடம் விசாரணை நடத்த முடியாது என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. தேவைப்பட்டால் அமலாக்கத் துறை கெஜ்ரிவாலிடம் விசாரணை மேற்கொள்ளலாம்.  வெறும் விசாரணைக்காக மட்டும் குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்ய அனுமதிக்க மாட்டோம். அதனை நாங்கள் நம்புகிறோம்.

கெஜ்ரிவால் ஒரு மாநிலத்தின் முதல்வராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராக உள்ளார். அவருக்கென்று சில உரிமைகள் உள்ளன. அப்படிப்பட்டவர் 90 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கிறார். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குகிறோம் என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டப்பிரிவு 19-ன் படி கைது செய்யப்பட்டது தவறானது என்று அர்விந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு குறித்தும், மதுபான கொள்கை ஊழல் நிதியை தேர்தலுக்கு பயன்படுத்தினால் என்ற அமலாக்கத் துறையின் புகார் குறித்தும் விரிவான அமர்வு விசாரிக்கும் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

இந்நிலையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவால் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சி.பி.ஐ. தொடர்ந்த இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை வரும் 25-ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இடைக்கால ஜாமின் கிடைத்த போதிலும், சி.பி.ஐ. கைது செய்யப்பட்ட வழக்கில் இன்னும் ஜாமின் கிடைக்காத காரணத்தினால் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியில் வருவதில் சிக்கல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து