முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பிரபல நடிகையின் சகோதரர் கைது

செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2024      சினிமா
Aman-Perthi 2024 07 16

Source: provided

ஐதராபாத் : பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங்கின் சகோதரர் உட்பட 5 பேர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பிரபல பாலிவுட் நடிகை ரகுல் பிரீத் சிங். இவர் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த 12-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இவரது சகோதரர் அமன் பிரீத் சிங். தற்போது இவரை போதைப்பொருள் வழக்கில் போலீசார் கைது  செய்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் போதைப்பொருள் விற்பனைக்காக கொண்டு வரப்படுவதாக அம்மாநில போதைப்பொருள் தடுப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று போதைப்பொருள் கடத்தல் முயற்சியை போலீசார் முறியடித்தனர். 

இதில், பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங்கின் சகோதரர் அமன் பிரீத் சிங் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். நரசிங்கியின் ஹைதர்ஷாகோட்லாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்திய தெலுங்கானா போலீசார், அவர்களிடம் இருந்து ரூ. 35 லட்சம் மதிப்புள்ள 199 கிராம் கோகோயின், 2 பாஸ்போர்ட்கள், 2 பைக்குகள் மற்றும் 10 செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு, போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ரகுல் பிரீத் சிங்கிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து