முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிக்கிமில் காணாமல் போன முன்னாள் அமைச்சரின் உடல் கால்வாயில் இருந்து மீட்பு

புதன்கிழமை, 17 ஜூலை 2024      இந்தியா
Sikkim 2024 07 17

Source: provided

கேங்டாக் : சிக்கிமில் காணாமல் போன முன்னாள் அமைச்சர் ஆர்.சி.பவுடியாலின் உடல் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இமயமலையையொட்டிய வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் முன்னாள் அமைச்சராக இருந்தவர் ஆர்.சி. பவுடியால் ( 90).  பாகியோங் மாவட்டத்தின் சோட்டா சிங்தம் நகரை சேர்ந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனார்.

இதனை தொடர்ந்து போலீசார் அவரை தேடி வந்தனர்.  இதற்காக தனியாக சிறப்பு புலனாய்வு குழு அன்றும் அமைக்கப்பட்டது.  இந்த நிலையில், புல்பாரி பகுதியில் உள்ள தீஸ்தா கால்வாயில் மிதந்து வந்த அவருடைய உடலை போலீசார் கண்டெடுத்தனர்.  அதனை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

அவர் அணிந்திருந்த கைக்கடிகாரம் மற்றும் உடைகளை கொண்டு அவரை போலீசார் அடையாளம் கண்டனர்.  சட்டசபையில் முதல் சபாநாயகராக பதவி வகித்த பெருமைக்குரியவர்.  அதன்பின் மாநில வனத்துறை அமைச்சரானார்.  

சிக்கிம் அரசியலில் முக்கிய பிரமுகரான அவர், ரைசிங் சன் என்ற கட்சியை தொடங்கி நடத்தினார். சிக்கிமின் கலாசார மற்றும் சமூக செயல்முறைகளை பற்றி ஆழ்ந்த புரிந்துணர்வு கொண்டவர்.  அவருடைய மறைவுக்கு சிக்கிம் முதல்வர் பி.எஸ். தமங் இரங்கல் தெரிவித்து உள்ளார்.  அவருடைய மறைவை அடுத்து, விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து