முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 20 ஆண்டுகளில் 12.30 லட்சம் வழக்குகளை விசாரித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை சாதனை

புதன்கிழமை, 24 ஜூலை 2024      தமிழகம்
MDU-High-Court 2023-02-16

Source: provided

மதுரை : 21-வது ஆண்டில் நேற்று அடியெடுத்து வைத்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, கடந்த 20 ஆண்டுகளில் 12.30 லட்சம் வழக்குகளை விசாரித்து சாதனை படைத்துள்ளது. 

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு உலகநேரியில் 24.07.2004-ல் தொடங்கப்பட்டது. மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த வழக்குகள் மதுரை அமர்வில் விசாரிக் கப்படுகின்றன. நாட்டின் பசுமையான அமர்வு என மதுரை அமர்வு அழைக்கப்படுகிறது.

மரங்களுக்கு மத்தியில் அழகான உயரமான நவீன வசதிகள் நிரம்பிய நீதிமன்ற அரங்குகள், நிர்வாகக் கட்டிடம், தலைமை நீதிபதி, சக நீதிபதிகளுக்கான குடியிருப்புகள், நீதிபதிகளுக்கான உணவுக் கூடம், தங்கும் விடுதி, வழக்கறிஞர்கள் அறைகள், மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் அலுவலகம், காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், மருந்தகம், உணவகம் என அனைத்தும் ஒரே வளாகத்தில் அமைந்திருப்பது மதுரை அமர்வின் தனிச் சிறப்பு.

தொடக்கத்தில் இங்கு 3 நீதிபதிகள் மட்டுமே இருந்த நிலையில். தற்போது 20 பேர் உள்ளனர். மதுரை அமர்வில் வழக்கறிஞர்களாகப் பணிபுரிந்த ஜோதிமணி, நாகமுத்து, டி.ராஜா, ஆர்.எஸ்.ராமநாதன், சுகுணா, எஸ்.எஸ்.சுந்தர், நிஷாபானு, ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.ஸ்ரீமதி, பி.புகழேந்தி, ஆர்.விஜயகுமார், எல்.விக்டோரியாகவுரி, கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் நீதிபதிகளாகத் தேர்வாகினர். இதுவரை 25-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மூத்த வழக்கறிஞர்களாகத் தேர்வாகி உள்ளனர்.

மதுரை அமர்வு தொடங்கிய நாளிலிருந்து வழக்குகள் தாக்கலாவது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த 20 ஆண்டுகளில் மதுரை அமர்வில் 12.30 லட்சம் வழக்குகள் விசாரித்து முடிக்கப்பட்டுள்ளன. 77,751 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மதுரை அமர்வின் 20-வது ஆண்டு நிறைவு விழா கடந்த வாரம் உயர் நீதிமன்றத்தால் மதுரையில் வெகு விமரிசையாக நடந்தது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசும்போது, மதுரை அமர்வு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மதுரை அமர்வு அளித்த தீர்ப்புகள் நீதியை மட்டும் வழங்கவில்லை, சமூக மாற்றத்தையும் ஏற்படுத்தியது என மகிழ்ச்சி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து