முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்லத்தடை : ரகசியங்களை பாதுகாக்க நடவடிக்கை

புதன்கிழமை, 31 ஜூலை 2024      உலகம்
China 2024 07 31

Source: provided

பெய்ஜிங் : அரசு ரகசியங்களை பாதுகாக்கும் நோக்கில் சீனாவில் அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்த புதிய விதிமுறைகள் செப்டம்பர் மாதத்துக்குள் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில், அரசு கட்டுப்பாடுகள் அதிகம். டிவி, சமூக வலைதளம், இன்டர்நெட் எல்லாவற்றிலும் அரசின் கண்காணிப்பு இருக்கும். அரசு ரகசியங்களை பாதுகாக்கும் நோக்கில், இப்போது அரசு ஊழியர்களுக்கு சீனா புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:

அரசு அதிகாரிகளுக்கு, ரகசியங்களை பாதுகாக்க பயிற்சி அளிக்க வேண்டும்.  அரசு ரகசியங்களை கையாளும் ஊழியர்கள், முன் அனுமதியின்றி வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.

ஊழியர்கள் தங்களது பணியில் இருந்து விலகிய பிறகும், ரகசிய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். சில கட்டுப்பாடுகள் ஆயுள் முழுவதும் நீடிக்கும்.

ரகசியங்களை பாதுகாக்க, குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தான் முக்கிய ஆவணங்களை பார்க்க வேண்டும். ஆவணங்களை நகலெடுக்கவோ, பதிவிறக்கவோ முடியாது. 

ரகசியங்களை பாதுகாக்கும் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் சிறந்த பங்களிப்பைச் செய்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வெகுமதி அளிக்கப்படும். புதிய விதிமுறைகள் செப்டம்பர் மாதத்துக்குள் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து