முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணையில் இருந்து 2-வது நாளாக 1.70 லட்சம் கன அடி நீர் திறப்பு

புதன்கிழமை, 31 ஜூலை 2024      தமிழகம்
Mettur-Dam 2024 07 31

Source: provided

மேட்டூர் :  காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடகாவின் கபினி, கிருஷ்ணராஜசாகர் கேரங்கி கேமாவதி  உள்ளிட்ட அணைகள் நிரம்பியதையடுத்து காவிரியில் உபரிநீர் அதிக பட்சமாக  2 லட்சம் கன அடி நீர்  வெளியேற்றப்படுகிறது..

இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைமுழு கொள்ளளவான 120 அடியை நேற்று  முன்தினம் மாலை 6 மணியளவில் 43 வது முறையாக எட்டியது. அணைக்கு வரும் நீர் முழுவதும் 16 கண் மதகு வழியாகவும், நீர் மின் மற்றும் சுரங்க மின் நிலையங்கள் வழியாகவும் கால்வாய் வழியாகவும் விநாடிக்கு நேற்று முன்தினம் 1.25 லட்சம் கன அடியாகவும் நேற்று  1.70 லட்சம் கன அடியாகவும்  தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இதன் மூலம் சுமார் 16.50 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றனர்.  மேலும் திறக்கப்படும் தண்ணீரில் 21500 கன அடி தண்ணீர் அணையின் சுரங்க மற்றும் அணை மின் நிலையங்கள் வழியாக 250 மெ/வா மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று சுரங்க மின்னிலையங்களின் மேற்பார்வை பொறியாளர் தேவதாஸ் தெரிவித்தார். மேலும்  மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் காவிரி உபரி நீரை, சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீரேற்றம் செய்யும் திட்டம் 

ரூ 674 கோடியில், சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று  சேலம் மாவட்ட ஆட்சியரால் திப்பம்பட்டி உபரிநீர் திட்டம் மூலம்  எம்.காளிப்பட்டி ஏரி, ராயப்பன் ஏரி, சின்னனேரி, மானத்தாள் ஏரி, டி,மாரமங்களம் ஏரி நிரப்பப்படவுள்ளது. தொடர்ந்து, நங்கவள்ளி குட்டை ஏரி வனவாசி ஏரி, கண்கான் ஏரி உள்ளிட்ட 50 ஏரிகளுக்கும் தண்ணீர் நிரப்பப்படவுள்ளது.

இதன் மூல 4000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த 50 ஏரிகளுக்கும் தண்ணீர் நிரம்புவதை கண்காணிக்க 5 க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று 4 மணி நிலவரபடி மேட்டுர் அணையின் நீர்மட்டம் 120 அடியும் அணையின் நீர் இருப்பு 93.470 டி எம் சி ஆகவும் அணையின் நீர் வரத்து 1.25 லட்சம் கன அடியாகவும் உள்ளது.

இதன் காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுகிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் முதல் பல்வேறு பகுதிகளில் இருந்து பல ஆயிரம் பேர் புதிய எல்லிஸ் பாலத்தில் குவிந்தனர் வரும் சனிக்கிழமை ஆடிப்பெருக்கு என்பதால் லட்சக்கணக்கான மக்கள் திரல்வார்கள் என்பதால் காவல் துறை தீ அணைப்பு துறை, வருவாய் துறை மற்றும் நீர் வளத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து