முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு தடை விதிக்க சபாநாயகர் கோரிக்கை

புதன்கிழமை, 31 ஜூலை 2024      தமிழகம்
Appavu 2023-09-12

Source: provided

சென்னை : சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். பேரவைத் தலைவர் அப்பாவு, முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

விருதுநகர், தூத்துக்குடி. திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், தீப்பெட்டி உற்பத்தி தொழில் முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. கடந்த காலத்தில் வெளிநாட்டு தீப்பெட்டிகள் மற்றும் சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் இறக்குமதி காரணமாக தீப்பெட்டி உற்பத்தி தொழில் கடுமையாக பாதித்தது.

இதைத் தொடர்ந்து, சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு 08.09.2022 அன்று தாங்கள் கடிதம் எழுதி வலியுறுத்தியதன் விளைவாக இந்த சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.மேலும், வெளிநாட்டு தீப்பெட்டி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டது.

சீன லைட்டர்களுக்கு தடை விதித்தாலும், வடநாட்டு நிறுவனங்கள் லைட்டர் மூலப் பொருள்களை இறக்குமதி செய்து தயாரிக்கின்றனர். மேலும் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். எனவே, சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் அப்பாவு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து