முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவுடன் கைதிகள் பரிமாற்றம்: விடுதலையான அமெரிக்கர்கள் அதிபர் ஜோபைடனுன் சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2024      உலகம்
Joe-Biden-2024-08-02

வாஷிங்டன், முதல் முறையாக அமெரிக்கா - ரஷ்யா இடையே கைதிகள் பரிமாறி கொள்ளப்பட்டுள்ளனர். விடுதலையான அமெரிக்கர்கள் அதிபர் ஜோபைடனை சந்தித்தனர். 

அமெரிக்கா, ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. மேற்கத்திய நாடுகளில் உளவு, பயங்கரவாதம் போன்ற  குற்ற செயல்களில் ஈடுபட்டதாக ரஷ்யா, பெலாரசை சேர்ந்த சிலரை அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. 

அதே போல், ரஷ்யா, பெலாரசில் உளவு, பயங்கரவாதம் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டதாக அமெரிக்கா, ஜெர்மனி, போலாந்து, ஸ்லோவேனியா, நார்வே போன்ற நாடுகளை சேர்ந்தவர்களை ரஷ்யா, பெலாரஸ் நாடுகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

இந்த நிலையில் சிறையில் உள்ள தங்கள் நாடுகளை சேர்ந்த நபர்களை விடுதலை செய்ய அந்தந்த நாடுகள் முயற்சித்து வருகின்றன. அந்த முயற்சிகளுக்கு அவ்வப்போது பலன் கிடைத்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்கா - ரஷ்யா இடையே கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. 

இந்நிலையில், பனிப்போர் காலத்திற்கு பின் முதல் முறையாக அமெரிக்கா - ரஷ்யா இடையே கைதிகள் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.

அதன்படி, ரஷ்யா, பெலாரஸ் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்கா, ஜெர்மனி உள்பட மேற்கத்திய நாடுகளை சேர்ந்த 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

இதற்கு பதிலாக அமெரிக்கா, ஜெர்மனி சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த ரஷ்யா, பெலாரசை சேர்ந்த 10 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 26 கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கைதிகள் பரிமாற்றம் துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்றுள்ளது. கைதிகள் பரிமாற்றத்தில் தி வால் ஸ்டிரீட் ஜெர்னலின் செய்தியாளர் இவென் ஜெர்ஷ்வொவிச் , அமெரிக்க கடற்படை முன்னாள் வீரர் பால் வீலன் , ரஷ்யாவை சேர்ந்த வடிம் ரசிகொவ் உள்ளிட்டோரும் அடங்குவர். 

அமெரிக்காவில் இருந்து விடுதலை செய்யப்பட்ட கைதிகள் துருக்கியில் இருந்து பின்னர் ரஷ்யா திரும்பினர். அவர்களை ரஷ்ய அதிபர் புடின் விமான நிலையத்தில் வரவேற்றார். அதே போல், ரஷ்யாவில் இருந்து விடுதலை செய்யப்பட்ட கைதிகள் துருக்கியில் இருந்து அமெரிக்கா, ஜெர்மனி சென்றடைந்தனர். 

விடுதலையான அமெரிக்கர்கள் அதிபர் ஜோ பைடனை சந்தித்தனர். ரஷ்யா, மேற்கத்திய நாடுகளுக்கு இடையேயான பனிப்போருக்கு பிறகு இருதரப்பும் அதிக எண்ணிக்கையிலான கைதிகளை பரிமாறிக் கொள்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து