Idhayam Matrimony

கல்லூரி செல்லும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2024      இந்தியா
Pudhucherry-2023-03-23

Source: provided

புதுச்சேரி: அரசுப் பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவ - மாணவியருக்கு மூன்று ஆண்டுகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்லூரி உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

புதுவை சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி நேற்று (வெள்ளிக்கிழமை) பட்ஜெட் தாக்கல் செய்தார். இலவச அரிசி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன. ஏழை மக்களின் மருத்துவ செலவு, புதுவை மருத்துவ நிவாரண சங்கத்தின் மூலம் திருப்பி அளிக்கப்படும். காமராஜர் நுாற்றாண்டு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஏழை மக்களின் குடிசை வீடுகளை கல்வீடுகளாக மாற்ற நிதியுதவி அளிக்கப்படும். ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கோயில்களை புனரமைக்க ரூ.10 லட்சம் நிதி அளிக்கப்படும். அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, இளநிலை கல்லுாரிகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

புதுவை, காரைக்கால் பிராந்தியத்தில் நலிவடைந்த கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்த ரூ.15 கோடி நடப்பு நிதியாண்டில் வழங்கப்படும். தடுப்பூசி அட்டவணைப்படி அனைத்து தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ளும் புதுவையை பூர்விகமாக கொண்ட பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும். கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வது தொடர்பாக நிர்வாக விதிமுறைகளில் ஒருமுறை தளர்வு அளித்து, விண்ணப்பங்களை பரிசீலிக்க ஒப்பீட்டு சேவை பயன் கொள்கையை உருவாக்க அரசு ஆராய்ந்து வருகிறது.

தொழிலாளர்களுக்கான குறைந்தப்பட்ச ஊதியம் 2017-க்குப் பிறகு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. குறைந்தப்பட்ச ஊதியம் ரூ. 5,220-ல் இருந்து ரூ. 13 ஆயிரம் ஆக பல்வேறு வேலைக்கு தகுந்தாற்போல் இருந்தது. அது ரூ. 5220-ல் இருந்து ரூ. 9,940 ஆகவும், அதேபோல் ரூ. 13 ஆயிரத்திலிருந்து ரூ. 23,790 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி நகரப்பகுதியில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்ய ரூ. 20.38 கோடியில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் நடக்கும்.

புதுச்சேரி - கடலூர் சாலையில் ஏஎஃப்டி அருகே போக்குவரத்து நெரிசலை குறைக்க ரயில்வே துறையுடன் இணைந்து ரூ. 71.4 கோடியில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படும். இதில் அரசு பங்களிப்பான ரூ. 53.55 கோடி ரயில்வேயிடம் தரப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணி விரைவில் தொடங்கப்படும். பாதாளச்சாக்கடை புனரமைப்புப் பணிகள் ரூ.52.5 கோடியில் விரைவில் தொடங்கும் என்று பட்ஜெட் அறிவிப்பில் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 9 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 9 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 11 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 11 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 9 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 10 hours ago
View all comments

வாசகர் கருத்து