எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் 8-வது நாளான நேற்று நடைபெற்ற ஆக்கி போட்டியில் ஏற்கனவே காலிறுதி வாய்ப்பை உறுதி செய்த இந்திய அணி தனது 5-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய அணி முதல் பாதியிலேயே 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதனையடுத்து நடைபெற்ற பிற்பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்தன. இதனால் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி லீக் சுற்றை வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது. இந்திய அணி தரப்பில் ஹர்மன்ப்ரீத் சிங் 2 கோல்களும், அபிஷேக் 1 கோலும் அடித்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் தாமஸ் கிரெய்க் மற்றும் பிளேக் கவர்ஸ் தலா 1 கோல் அடித்தனர்.
வில்வித்தை: இந்திய இணை தோல்வி
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் வில்வித்தை கலப்பு அணிகள் அரையிறுதி போட்டியில் இந்திய இணையான தீரஜ் பொம்மதேவரா- அங்கிதா பகத் ஜோடி, தென் கொரியாவின் ஷியோன் லிம் - வூஜின் கிம் இணையுடன் மோதியது. இதில் ஆதிக்கம் செலுத்திய தென் கொரிய இணை 6-2 என்ற புள்ளி கணக்கில் இந்திய ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதியில் தோல்வியடைந்த தீரஜ் பொம்மதேவரா- அங்கிதா பகத் ஜோடி அடுத்த வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் விளையாட உள்ளது.
இறுதிக்கு மனு பாக்கர் தகுதி
33-வது ஒலிம்பிக் போட்டியின் 8-வது நாளான நேற்று நடைபெற்ற பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 25 மீட்டர் பிஸ்டல் தகுதி சுற்று போட்டியில் இந்திய வீராங்கனைகளான மனு பாக்கர் மற்றும் இஷா சிங் கலந்து கொண்டனர். இதில் நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக 2 வெண்கல பதக்கம் வென்று கொடுத்து அசத்திய மனு பாக்கர் இன்றும் சிறப்பாக செயல்பட்டார். முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற சூழலில் மனு பாக்கர் 2-வது இடம் பிடித்து அசத்தினார். இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அவர் 3-வது பதக்கத்தை சுடுவார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதே வேளை மற்றொரு இந்திய வீராங்கனையான இஷா சிங் 18-வது இடம்பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
ஜூடோ: துலிகா தோல்வி
நேற்று நடைபெற்ற ஜூடோ பெண்கள் (78 கிலோவுக்கு மேல் எடைபிரிவு) முதல் சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை துலிகா மான் , கியூபா வீராங்கனை ஐடலிஸ் ஓர்டிஸ் உடன் மோதினார். இதில் வெறும் 28 நிமிடங்களிலேயே துலிகா மான் 0-10 என்ற கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார்.
இகா ஸ்வியாடெக் தோல்வி
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் 'நம்பர் ஒன்' வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து), சீனாவின் ஜெங் கின்வென்னுடன் மோதினார்.
இந்த போட்டியில் ஸ்வியாடெக் 2-6, 5-7 என்ற நேர் செட் கணக்கில் ஜெங் கின்வென்னிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்த நிலையில் வெண்கலப் பதக்கத்துக்காக இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக், சுலோவேகியா வீராங்கனை அன்னா கரோலினா உடன் மோதுகிறார்.
குசாலேக்கு ரூ.1 கோடி பரிசு
துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) இறுதிச்சுற்றில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்று அசத்தினார். ஒலிம்பிக் வரலாற்றில் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம் பெற்ற இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன. 3 பதக்கங்களும் துப்பாக்கி சுடுதலில் கிடைத்துள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா இரண்டுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வெல்வது இதுவே முதல் முறை. இந்த பெருமையை ஸ்வப்னில் குசாலே, மனு பாக்கர் மற்றும் சர்ப்ஜோத் சிங் ஆகியோருடன் இணைந்து பெற்றுள்ளார்.
இந்த நிலையில் துப்பாக்கி சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலேக்கு மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளார். முன்னதாக ஸ்வப்னில் குசாலே மற்றும் அவரது பயிற்சியாளர்கள் திபாலி தேஷ்பாண்டே மற்றும் விஸ்வஜித் ஷிண்டே ஆகியோருடன் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே காணொலி காட்சி வாயிலாக பேசினார். அப்போது ஏக்நாத் ஷிண்டே கூறும்போது, "இந்த பதக்கம் மராட்டியத்திற்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது. ஸ்வப்னில் 0.1 புள்ளி வித்தியாசத்தில் வெள்ளிப் பதக்கத்தைத் தவறவிட்டார். இருப்பினும், அவரது வெண்கலப் பதக்கம் ஒவ்வொரு மராட்டியருக்கும் புன்னகையை வரவழைத்துள்ளது. 72 ஆண்டுகளுக்கு பிறகு மராட்டியம் தனிநபர் பிரிவில் பதக்கம் பெற்றுள்ளது. ஸ்வப்னிலுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்" என்று கூறினார்.
ஜோகோவிச் அரையிறுதிக்கு தகுதி
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்நிலையில், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், கிரீஸ் வீரர் சிட்சிபாசுடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-3, 7-6 (7-3) என்ற செட்களில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். அரையிறுதியில் ஜோகோவிச் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டியுடன் மோதுகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 week 18 hours ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்1 week 3 days ago |
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக இயற்கை மருத்துவம்.2 weeks 14 hours ago |
-
பப்புவா நியூ கினியாவில் போப் சுற்றுப்பயணம்: மோதலை கைவிட பழங்குடியினருக்கு வேண்டுகோள்
07 Sep 2024போர்ட் மோர்ஸ்பி, பப்புவா நியூ கினியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் பழங்குடியின மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு வேண்டுகோள் வ
-
பேச்சாளர் மகாவிஷ்ணு நிகழ்ச்சிக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை: அசோக் நகர் பள்ளி மேலாண்மை குழு விளக்கம்
07 Sep 2024சென்னை, ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு நிகழ்ச்சிக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அசோக் நகர் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சித்ரகலா பேட்டியளித்துள்ளார்.
-
இ-ஆபீஸ் வழியே தமிழக அரசு பணி தொடர்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்
07 Sep 2024சான் பிரான்சிஸ்கோ, அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் இ-ஆபீஸ் வழியே பணி தொடர்கிறது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க.
-
அரசு பள்ளியில் சர்ச்சை பேச்சு எதிரொலி: ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணு கைது: * 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு * வரும் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
07 Sep 2024சென்னை, அரசுப்பள்ளியில் பேசிய பேச்சு சர்ச்சையான நிலையில் ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு நேற்று சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
-
பள்ளி நிகழ்ச்சிகளுக்கு விதிகளை வரையறுக்க விரைவில் கமிட்டி: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
07 Sep 2024தஞ்சாவூர், ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு விவகாரத்தை தொடர்ந்து பள்ளி நிகழ்ச்சிகளுக்கு விதிகளை வரையறுக்க விரைவில் கமிட்டி அமைக்கப்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்ச
-
மீனவர்கள் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்கும்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
07 Sep 2024சென்னை, வரும் 9-ம் தேதி தூத்துக்குடி மீனவர்கள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்கும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6,000 கனஅடியாக அதிகரிப்பு
07 Sep 2024ஈரோடு, நீலகிரியில் பரவலாக மழை பெய்ததால் 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து 6,431 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
தமிழகத்தில் 13-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
07 Sep 2024சென்னை, தமிழகத்தில் வரும் 13-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 10 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது
07 Sep 2024சென்னை, தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: தமிழ்நாடு மீனவர்கள் 14 பேர் சிறைபிடிப்பு
07 Sep 2024சென்னை, எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
-
தமிழக வங்கி சேவைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பம்: அமெரிக்காவில் வங்கி அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
07 Sep 2024சிகாகோ, தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துதல், அதிநவீன தொழில்நுட்பத்தை வங்கி சேவைகளில் அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் குறித்து அமெரிக்காவின் பிஎன்ஓய் மேலன் அத
-
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு
07 Sep 2024சென்னை, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
-
விநாயகர் சதுர்த்தி திருநாள்: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
07 Sep 2024புது டெல்லி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி.
-
நவ.1-முதல் படப்பிடிப்பு ரத்து என சினிமா தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு: பரிசீலனை செய்ய தென்னிந்திய நடிகர் சங்கம் வலியுறுத்தல்
07 Sep 2024சென்னை, நவம்பர் 1-ம் தேதி முதல் எந்த படப்பிடிப்பும் நடக்காது என்ற அறிவிப்பை தயாரிப்பாளர் சங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் வலியுறுத்தி உ
-
இன்று பாராலிம்பிக் நிறைவு விழா
07 Sep 2024மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
-
வெள்ள ஆய்வின் போது திடீரென எதிரே வந்த ரயில் உயிர் தப்பிய சந்திரபாபு நாயுடு
07 Sep 2024விஜயவாடா, பாலத்தில் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்த போது ரயில் வர, பாதுகாவலர்களால் நூலிழையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்
-
வேலி தாண்டிய பாக். ஆடுகள்: இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு வந்து புது பிரச்சனை
07 Sep 2024ஜெய்ப்பூர், வேலி தாண்டி, இந்திய எல்லைக்குள் புகுந்த ஆடுகளை என்ன செய்வது என்று தெரியாமல், எல்லைப் பாதுகாப்பு படையினர் பரிதவிக்கின்றனர்.
-
குரூப் 1 தேர்வு மூலச் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
07 Sep 2024சென்னை, குரூப் 1 தேர்வு மூல சான்றிதழை வரும் 16-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
-
புதுமையான மாணவர் ஆராய்ச்சி திட்டத்தில் ரூ.10 ஆயிரம் நிதியுதவி: உயர்கல்வி துறை தகவல்
07 Sep 2024சென்னை, தமிழக மாணவர்களின் ஆராய்ச்சி திறனை ஊக்குவிக்க புதுமையான மாணவர் ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.10,000 வரை நிதியுதவி அளிக்கப்பட்டு வருவதாக உயர்கல்வித் துறை தெரிவித்
-
த.வெ.க. மாநாடு தேதி ? நடிகர் விஜய் இன்று அறிவிப்பு
07 Sep 2024சென்னை, தமிழக வெற்றிக்கழக மாநாடு நடைபெறும் தேதியை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்.
-
பக்தர்களுக்கு இலவசமாக திருநாமமிடும் திட்டம்: திருப்பதி தேவஸ்தான அதிகாரி தொடங்கி வைத்தார்
07 Sep 2024திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நெற்றியில் இலவசமாக திருநாமம் இடும் திட்டத்தை தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளாராவ் தொடங்கி வ
-
இஸ்ரேல் துப்பாக்கி சூட்டில் அமெரிக்க பெண் உயிரிழப்பு: வெள்ளை மாளிகை கண்டனம்
07 Sep 2024வாஷிங்டன், இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அமெரிக்க பெண் பலியான சம்பவத்திற்கு வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கண்டனம் தெரிவித்
-
அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்பை விட ஹாரிசின் பிரச்சார குழுவுக்கு 3 மடங்கு அதிக நன்கொடை
07 Sep 2024வாஷிங்டன், கமலா ஹாரிசின் பிரச்சார குழுவுக்கு டிரம்பை விட கிட்டத்தட்ட3 மடங்கு அதிக நன்கொடை வந்துள்ளது.
-
விநாயகர் சதுர்த்தி: பிள்ளையார்பட்டி கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் கோலாகலம்
07 Sep 2024திருப்பத்தூர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் நேற்று தீர்த்தவாரி உற்சவம் கோலாகலமாக நடந்தது.