முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசீனா வெளியேறிய பிறகும் 100-க்கும் மேற்பட்டோர் பலி

செவ்வாய்க்கிழமை, 6 ஆகஸ்ட் 2024      உலகம்
Sheick-Hasina

டாக்கா, வங்கதேசத்தில் இருந்து ஷேக் ஹசீனா வெளியேறிய பிறகும் தலைநகர் டாக்கா மற்றும் சில பகுதிகளில் வன்முறை நிகழ்ந்துள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட தொடர் வன்முறையையடுத்து, பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ராணுவ விமானம் மூலம் நேற்று முன்தினம் இந்தியாவுக்கு வந்துள்ளார். 

இதனால் வங்கதேசத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதனால் வங்கதேசத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. ஷேக் ஹசீனா வங்கதேசத்தில் இருந்து வெளியேறிய பிறகும் தலைநகர் டாக்கா மற்றும் சில பகுதிகளில் வன்முறை நிகழ்ந்துள்ளது.

டாக்காவில் போராட்டக்காரர்கள் பிரதமர் மாளிகைக்குள் சென்று சூறையாடினர். ஹசீனாவுக்கு சொந்தமான நிறுவனங்களும் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. மேலும் அந்த நாட்டு அமைச்சர்கள், எம்.பி.க்களின் வீடுகளும் தாக்கப்பட்டன.

நேற்று முன்தினம் மட்டும் வங்கதேசத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறையில் 119 பேர் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.  கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 119 பேர் கொல்லப்பட்ட நிலையில் தற்போது வரை வங்கதேச வன்முறையில் 440 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை 37 உடல்கள் டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.  எனினும் நேற்று செவ்வாய்க் கிழமை காலை வங்கதேசத்தில் சற்று அமைதி நிலவியதாகவும் பேருந்து, ஆட்டோ என போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளதாகவும் சில கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அரசு வாகனங்கள் அலுவலகத்திற்குச் செல்வதாகவும் அந்த நாட்டு இணைய ஊடகம்  செய்தி வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து