முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல அமெரிக்க பாடகியின் இசை நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்த திட்டம் - 2 பேர் கைது

வியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2024      உலகம்
Taylor-Swift 2024 08 08

Source: provided

வியன்னா : பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக பிரபல அமெரிக்க பாடகி டெய்லர் ஸ்விப்ட்டின் இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகி டெய்லர் ஸ்விப்ட்டின் இசை நிகழ்ச்சி ஆஸ்திரியா நாட்டில் 3 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில் டெய்லர் ஸ்விப்ட்டின் இசை நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் சதித்திட்டம் தீட்டியதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் 19 வயது நபரும் அடங்குவார்.

கைது செய்யப்பட்ட நபர்கள் இசை நிகழ்ச்சியில் ரசாயன தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக தகவல் வெளயாகி உள்ளது. அவர்கள் வீட்டில் பல்வேறு ரசாயனங்கள் மற்றும் பொருட்களை போலீசார் கண்டறிந்தனர். அவை வெடிபொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, "அவர்கள் வியன்னாவின் எர்ன்ஸ்ட் ஹாப்பல் ஸ்டேடியத்தில் நடைபெற இருந்த ஸ்விப்ட்டின் இசை நிகழ்ச்சிகளை குறிவைத்திருந்தனர். கைது செய்யப்பட்ட 19 வயதான நபர் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்தவர். அவர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்கு ஆதரவாளராக இருந்துள்ளார். கைதான இருவரும் ஆன்லைனில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளனர்" என்று கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து