முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லை பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை: கேரள அரசு எச்சரிக்கை

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2024      இந்தியா
Kerala-Assembly

இடுக்கி, முல்லை பெரியாறு அணை குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா அமைச்சர் எச்சரித்துள்ளார்.

இடுக்கியில் கேரள நீர்ப்பாசனத்துறை மந்திரி ரோஷி அகஸ்டின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- பொதுமக்களுக்கு பீதி ஏற்படுத்தும் வகையில் முல்லை பெரியாறு அணை குறித்தும், அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்தும் பலர் ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இதுபோன்ற பொய்யான தகவலை பரப்பும் யூடியூபர்கள் உள்ளிட்டோர் மீது மாநில அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும்.

முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அரசு மிகுந்த அக்கறை கொண்டு உள்ளது. இங்கு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் மாநில அரசு பொறுப்பை ஒப்படைத்துள்ளது. ஊராட்சி அளவில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு முல்லை பெரியாறு அணை பகுதி கண்காணிக்கப்படும். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள மக்களுடன் மாநில அரசு இணைந்து நின்று செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து