Idhayam Matrimony

கன்னட நடிகர் தர்ஷன் வழக்கில் வைரலான முக்கிய புகைப்படம்

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2024      இந்தியா
Dharsan

Source: provided

பெங்களூரு: கன்னட நடிகர் தர்ஷன், தனது ரசிகரைக் கொலை செய்த வழக்கில், 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்ட ரேணுகாசாமியின் புகைப்படம் ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாகியிருக்கிறது.

ரசிகர் கொலை வழக்கில், நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா உள்பட 17 பேருக்கு எதிராக காவல்துறை நேற்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில், புதிய திருப்பமாக, கொலை செய்யப்பட்ட ரேணுகாசாமியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது. தர்ஷன் சார்பில் கூலிப்படையினர் ரேணுகாசாமியை கடத்தி வந்து அடித்துக் கொலை செய்வதற்கு முன்பு எடுத்த புகைப்படம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடக காவல்துறையினர் 3991 பக்க குற்றப்பத்திரிகையை நேற்று தாக்கல் செய்த நிலையில், இன்று இந்தப் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. ஐஏஎன்எஸ் வெளியிட்டிருக்கும் இந்தப் புகைப்படத்தில், ரேணுகாசாமி டிரக்குகள் பின்னணியில் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், சர்ட் இல்லாமல் அச்சத்தோடு அமர்ந்திருக்கும் புகைப்படமும், நினைவில்லாமல் கிடக்கும் புகைப்படமும் வெளியாகியிருக்கிறது.

இந்தப் புகைப்படங்கள் அனைத்தும், தர்ஷனின் உதவியாளர் பாவன் செல்போனில் இருந்ததாகவும், இதனை அடிப்படை ஆதாரமாக காவல்துறையினர் கைப்பற்றியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த புகைப்படம் கசிந்திருப்பது குறித்து கர்நாடக காவல்துறை இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து