முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பண்டிகை காலத்தில் அதிக கட்டணம்: விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2024      இந்தியா
Air-India

Source: provided

புதுடில்லி : பண்டிகை காலங்களில் கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

விடுமுறை காலங்களில் பயணிகள் அதிகம் பேர் விமான பயணத்தை நாடுவதை பயன்படுத்தி கொள்ள நினைக்கும் நிறுவனங்கள், அந்த நேரத்தில் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி வருகின்றன. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியதாவது: பண்டிகை காலத்தில் விமான கட்டணம் தொடர்ந்து அதிகரிக்கப்படும் விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பயணிகள் எந்தவித அசவுகரியம் ஏற்படக்கூடாது என் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தி உள்ளோம்.

பண்டிகை காலத்தில் அனைவரும் வீடுகளுக்கு திரும்ப நினைப்பார்கள். இதனால், கட்டணத்தை உயர்த்தக்கூடாது. விமான நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணங்கள் கண்காணிக்கப்படுகிறது. அனைத்து நிறுவனங்களும் ஒரே மாதிரியான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என கட்டாயப்படுத்த மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து