முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மே.வங்க அரசு அறிக்கை

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2024      இந்தியா
CBI 2023 04 19

புதுடெல்லி, கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கில் இதுவரை என்ன விசாரணை நடைபெற்று இருக்கிறது; என்ன மாதிரியான விவரங்கள் தெரியவந்துள்ளன; மேற்கொண்டு என்ன விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்பவை உள்ளிட்ட விவரங்களை சிபிஐ, நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. இதேபோல் மாநில அரசு சார்பிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்டு இன்றோடு ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. இந்த வழக்கு கடந்த 22 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, மருத்துவமாணவி பலியான சம்பவத்தில் வழக்கு பதிவு செய்ய தாமதம் செய்தது ஏன்? என கொல்கத்தா போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட், சரமாரி கேள்விகளை எழுப்பியது.

இந்த நிலையில் இன்றைய தினம் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மேற்கண்ட நிலை அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அதேபோல மேற்கு வங்க அரசு தரப்பிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மருத்துவர்கள் போராடி வரும் நிலையில், 23 நோயாளிகள் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐ மற்றும் மேற்கு வங்க அரசு தாக்கல் செய்த அறிக்கைகளை நீதிபதிகள் ஆய்வு செய்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து