முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி வரும் 14-ம் தேதி அரியானாவில் தேர்தல் பிரசாரம்

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2024      இந்தியா
mODI 2023-05-25

சண்டிகர், அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை, டிராக்டரில் சென்று அந்த மாநிலத்தின் முதல்வர் நயாப் சிங் சைனி தாக்கல் செய்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில் வரும் 14-ம் தேதி பிரதமர் மோடி அரியானாவில் தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 5-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவோர் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் செப். 12-ம் தேதியுடன் முடிவடையவுள்ளது. லத்வா சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் நயாப் சைனி, பாஜக தொண்டர்களுடன் டிராக்டரில் பேரணியாக சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது, செய்தியாளர்களுடன் நயாப் சைனி பேசியதாவது:

“லத்வா மக்களின் அன்பு மற்றும் ஆசிர்வாதத்தால் நனைந்தேன். தேர்தல் முடிவுகள் வந்தவுடன், 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும். பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து அரியானாவை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்லவுள்ளோம். பூபிந்தர் சிங் ஹூடாவிடம் எவ்வித கொள்கையோ, நோக்கமோ இல்லை. மக்கள் இணைந்து பாஜக ஆட்சியை மூன்றாவது முறையாக அமைப்பார்கள். அரியானாவுக்கு தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி, செப். 14-ம் தேதி வருகை தரவுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து