முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டில்லியில் உற்சாக வரவேற்பு

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2024      விளையாட்டு
Paralympic-2024-09-07

Source: provided

பாரிசில் இருந்து திரும்பிய இந்திய பாராலிம்பிக் வீரர்களுக்கு டில்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பாராலிம்பிக் போட்டி கடந்த ஆக. 28ல் துவங்கியது. நேற்று நிறைவு பெற்றது. இதில் 168 நாடுகளை சேர்ந்த 4,400 மாற்றுத்திறனாளி நட்சத்திரங்கள் மனஉறுதியுடன் சாதித்தனர். இந்தியா சார்பில் 84 பேர், 12 வகையான போட்டிகளில் பங்கேற்றனர். தடகளம், பாட்மின்டன், துப்பாக்கி சுடுதல், வில்வித்தை, ஜூடோ என 5 போட்டிகளில் அசத்திய நமது நட்சத்திரங்கள் மொத்தம் 29 பதக்கங்கள் பெற்று தந்தனர்.

பாரிஸ் பாராலிம்பிக்கில் 7 தங்கம் உட்பட 29 பதக்கம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் 18வது இடம் பிடித்தது. முதலிடத்தை சீனா தட்டிச் சென்றது. இந்நிலையில், நேற்று (செப்.,10) பாரிசில் இருந்து திரும்பிய இந்திய பாராலிம்பிக் வீரர்களுக்கு டில்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் மேள தாளத்துடன் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பாராலிம்பிக் வீரர்களுடன் மகிழ்ச்சியாக மொபைல் போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். டோக்கியோ பாராலிம்பிக்கில் (2021) இந்தியாவுக்கு 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கம் கிடைத்திருந்தது. பாராலிம்பிக்கில் 1968 முதல் 2021 வரை இந்தியா (9 தங்கம், 12 வெள்ளி, 10 வெண்கலம்) மொத்தம் 31 பதக்கம் வென்றது. இம்முறை பாரிசில் மட்டும் 29 பதக்கங்கள் கிடைத்தன.

_________________________________________________________________________________________

இலங்கை வீரர் சாதனை 

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் இலங்கை வீரர் பதும் நிசங்கா முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்த பதும் நிசாங்கா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நடப்பு ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக அடித்தவர் பட்டியலில் இலங்கை வீரர் பதும் நிசங்கா 1,135 ரன்கள் அடித்து முதலிடம் பிடித்துள்ளார்.

பதும் நிசங்கா - 1,135 ரன்கள் ( 25 இன்னிங்ஸ்), கமிந்து மெண்டிஸ் - 1,111 ரன்கள் (36 இன்னிங்ஸ்), ஜெய்ஸ்வால் - 1,033 ( 19 இன்னிங்ஸ்), ரோஹித் சர்மா - 990 ரன்கள் ( 25 இன்னிங்ஸ்), ஜோ ரூட் - 986 ரன்கள் (20 இன்னிங்ஸ்).

_________________________________________________________________________________________

மஹாவீர் போகத் நம்பிக்கை

வினேஷ் போகத் உறவினருமான மஹாவீர் போகத் கூறுகையில், வினேஷ், லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முயற்சித்திருக்க வேண்டும். ஆனால், அவர் அரசியலில் நுழைந்துவிட்டார், 2028 ஒலிம்பிக் போட்டிக்காக நாங்கள் சங்கீதாவை தயார் செய்து வருகிறோம், இந்தியாவுக்காக அவர் பதக்கம் வெல்வார், ஜந்தர் மந்தர் போராட்டத்தால்தான் தேசிய போட்டிகளை சங்கீதா தவறவிட்டார், பபிதா போகத் உடல்நிலை சரியில்லை, அவர் மீண்டும் வருவது சிரமம் என்று தெரிவித்துள்ளார்.

துரோனாசாரியா விருது பெற்றிருக்கும் மஹாவீர், வினேஷ் போகத் அரசியலில் நுழைந்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ஆனால், அரசியலில் நுழைவது என்பது அவர் மற்றும் அவரது கணவர் சோம்வீரின் முடிவு. எங்களுக்கு அதில் விருப்பம் இல்லை, அவரது முடிவு எனக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை, ஒட்டுமொத்த நாடும் 2028ல் இந்தியாவுக்காக அவர் தங்கம் வென்று வருவார் என்றுதான் எதிர்பார்த்தது, நானும் அதைத்தான் எதிர்பார்த்தேன். ஆனால், அவர் அரசியலில் நுழைந்துவிட்டார், அவர் எம்எல்ஏவாகவோ, அமைச்சராகவோ ஆகலாம், ஆனால், ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் அது அவரது வாழ்நாள் நினைவாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். ஒலிம்பிக்கில் அவர் அதிருப்தி அடைந்திருந்த போது, அவர் அரசியலுக்கு வருமாறு அழைக்கப்பட்டார், முதலில், அவருக்கு தேர்தலில் போட்டியிட விருப்பம் இருந்திருக்கவில்லை என்றும் மஹாவீர் கூறியுள்ளார்.

_________________________________________________________________________________________

2-ம் நாள் ஆட்டமும் ரத்து

மழை காரணமாக ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி கிரேட்டர் நொய்டாவில் நேற்று (செப்டம்பர் 9) தொடங்கியது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் தாமதமாக தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர், முதல் நாள் ஆட்டம் ரத்து செயப்பட்டது.

இந்த நிலையில், மழை காரணமாக இரண்டாம் நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. போட்டியின் இரண்டாம் நாளான நேற்று வானம் தெளிவாக இருந்தபோதிலும், மைதானத்தில் ஈரப்பதம் அதிக அளவில் இருப்பதால் போட்டியை நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து