எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி டி.வி. நேரலையில் டிரம்ப் - கமலா ஹாரிஸ் இடையே அனல் பறந்த விவாதம் நடைபெற்றது. இதில் அமெரிக்கப் பொருளாதார நிலவரம் முதல் கருக்கலைப்புச் சட்டம் வரை விவாதம் நடைபெற்றது.
வரும் நவம்பர் 5-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான கமலா ஹாரிஸ் - டிரம்ப் இடையிலான நேருக்கு நேர் விவாதத்தை அமெரிக்காவின் பிலடெல்பியாவில் ஏ.பி.சி ஊடகம் ஏற்று நடத்தியது.
விவாதத்தைத் தொடங்கிய ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், டிரம்ப் ஆட்சியின் கீழ் தான் அமெக்கா மிகப் பெரிய வேலைவாய்ப்பின்மை சிக்கலை எதிர்கொண்டது. அமெரிக்க பொருளாதாரத்தின் பெரும் மந்தநிலை காலத்துக்குப் பின்னர் மோசமான வேலைவாய்ப்பின்மை சிக்கல் டிரம்ப் ஆட்சியில் தான் நிகழ்ந்தது. நான் அதிபரானால் அந்த நிலை மாற்றப்படும். அமெரிக்காவில், வேலைவாய்ப்புகளைத் தரும் பொருளாதாரத்தை கட்டமைக்க விரும்புகிறேன். அமெரிக்காவில் வீட்டு வசதியை கையடக்க விலைக்குக் கொண்டு வருவேன். குழந்தை வரிக்கடன் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். டிரம்ப் அதிபரானால் அவர் டிரம்ப் சேல்ஸ் டேக்ஸ் கொண்டு வருவார்.
அதாவது அன்றாடம் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் 20 சதவீதம் வரி விதிக்கப்படும். கோவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர் டிரம்ப் ஏற்படுத்தி வைத்திருந்த பொருளாதார சீரழிவுகளை பைடன் சரிசெய்துள்ளார். டிரம்புக்கு உங்களுக்கான திட்டம் என்று எதுவும் இல்லை. அவர் எப்போதும் அவரை தற்காத்துக் கொள்வதிலேயே முனைப்பு காட்டுவார் என்றார். ஆனால் இதனை மறுத்த டிரம்ப், தனது ஆட்சிக் காலத்தில் தான் அமெரிக்கப் பொருளாதாரம் மிக செழிப்பாக இருந்தது என்றார்.
கருக்கலைப்பு உரிமைகள் பற்றி பேசுகையில், டிரம்ப் அதிபரானால் தேசம் தழுவிய கருக்கலைப்பு தடை அமலுக்கு வரும். பாலியல் வன்கொடுமைகள், நெருங்கிய குடும்ப உறவுகளுக்கு இடையேயான தகாத பாலுறவு மூலம் உருவாகும் கருவினை கலைப்பது கூட டிரம்ப் ஆட்சி அமைந்தால் கடினமாகி விடும். அதனால் டிரம்ப்பை ஆதரிக்கக் கூடாது என்று கமலா ஹாரிஸ் கூறினார். அப்போது டிரம்ப், சில மாகாணங்களில் குழந்தைகள் பிறந்த பின்னர் கொல்லப்படுகின்றனர். ஜனநாயகக் கட்சி 9-வது மாதத்தில் கூட கருக்கலைப்பை அனுமதிக்க வேண்டும் என விரும்புகிறது என்றார்.
அப்போது குறுக்கிட்ட நெறியாளர் அமெரிக்காவில் குழந்தைகள் பிறந்த பின்னர் கொலை செய்யப்படுவதை எந்த மாகாண சட்டமும் அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்தார். அதை தொடர்ந்து கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்து 2 ஆண்டுகளுக்கு முன்பு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 3 பேர் டிரம்பால் நியமனம் செய்யப்பட்டவர்கள் என்று கமலா ஹாரிஸ் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து சட்டவிரோத குடியேற்றம் அமெரிக்காவுக்கு சவாலாக இருப்பதாக கூறிய டிரம்ப், அவ்வாறு குடியேறுபவர்கள் ஓஹியோ நகரவாசிகளின் செல்லப் பிராணிகளை வதைத்து உணவாக்கிக் கொள்வதாகக் கூறினார். அதற்கு நெறியாளர் குறுக்கிட்டு அப்படியான செய்திகளுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று தெரிவித்தார்.
ரஷ்யா - உக்ரைன் போர்: ரஷ்யா - உக்ரைன் போர் 31-வது மாதமாக நீடித்து வரும் நிலையில் அது குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ், எங்களுக்கும் ஜெலன்ஸ்கிக்கும் இடையே நல்லுறவு இருக்கிறது. நல்லவேளை இந்த போர் மூண்ட தருணத்தில் நீங்கள் (டிரம்ப்) அதிபராக இருக்கவில்லை. இல்லாவிட்டால் இந்நேரம் புடின், கீவ் நகரில் அமர்ந்து கொண்டு ஐரோப்பிய நாடுகளை எப்படித் தாக்குவது என்று திட்டம் தீட்டிக் கொண்டு இந்திருப்பார். புடின் ஒரு சர்வாதிகாரி. அவர் உங்களை மதிய உணவாக புசித்து விடுக்கூடும் என்று எச்சரித்தார். அதற்குப் பதிலளித்த டிரம்ப், கமலா ஹாரிஸ் தான் அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான துணை அதிபர். உக்ரைன் - ரஷ்ய போரை அவர் தடுக்கத் தவறி விட்டார் என்றார்.
அதை தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதலில் 40 ஆயிரம் பாலஸ்தீனர்கள் இறந்து விட்டனர். நான் மட்டும் அதிபராக இருந்திருந்தால் இந்தப் போர் மூண்டிருக்காது. கமலா ஹாரிஸுக்கு இஸ்ரேல் மீது கடும் வெறுப்பு உண்டு. அவர் அமெரிக்க அதிபரானால் இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் என்ற நாடே இல்லாமல் போகி விடும் என்று டிரம்ப் தெரிவித்தார். டிரம்பின் இந்தக் குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன். அவர் பிரச்சினையை திசைதிருப்பி, பிரித்தாள முயற்சிக்கிறார். அவருக்கு எப்போதுமே சர்வாதிகாரிகள் மீது அபிமானம் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. அவர் தன்னையே ஒரு சர்வாதிகாரியாகப் பார்க்கவே விரும்புகிறார் என்று கமலா ஹாரிஸ் பதிலடி கொடுத்தார். இவ்வாறாக ட்ரம்ப் - ஹாரிஸ் நேரடி விவாதம் களை கட்டியது. இந்த விவாதத்துக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 weeks 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 weeks 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 1 week ago |
-
வடமேற்கு வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் நாளை உருவாகிறது: தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை தொடரும்
12 Oct 2024சென்னை, அரபிக்கடலில் காற்றழுத்தாழ்வு நிலை ஏற்கனவே உருவாகியுள்ள நிலையில், நாளை வங்கக்கடலிலும் காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு
-
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழகத்தில் நீர்நிலைகள் தொடர்ந்து கண்காணிப்பு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தகவல்
12 Oct 2024சென்னை, தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக தெரிவித்த, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
-
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் முறைகேடாக ஆதார் அட்டை பெறுவதை தடுக்க விரைவில் புதிய நடைமுறை அமல்
12 Oct 2024புதுடெல்லி, இந்தியாவில் ஒருங்கிணைந்த அடையாள அட்டையாக ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை ஆதார் மையங்களில் பொதுமக்கள் விண்ணப்பித்து அட்டையை பெற முடியும்.
-
50 ஆண்டுகளில் முதல்முறையாக சஹாரா பாலைவனத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம்
12 Oct 2024ரபாட்டா : சஹாரா பாலைவனத்தில் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் சஹாரா பாலைவனப் பகுதியில் வெள்ளம் ஏற்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-
நவம்பர் 1 கர்நாடகா தினம்: அனைத்து நிறுவனங்களிலும் கொடியேற்ற துணை முதல்வர் சிவகுமார் உத்தரவு
12 Oct 2024பெங்களூரு : நவம்பர் கர்நாடகா தினத்தை முன்னிட்டு அனைத்து நிறுவனங்களிலும் கர்நாடகா மாநில கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என அம்மாநில துணை முதல்வர் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்
-
மோசமான வானிலை எதிரொலி: கோழிக்கோடு- துபாய் விமானம் கோவையில் அவசரமாக தரையிறக்கம்
12 Oct 2024கோவை : கோழிக்கோடு செல்லவிருந்த துபாய் விமானம் ஒன்று, கோவையில் தரையிறங்கியதால் திடீர் பரபரப்பு நிலவியது.
-
அரியானா முதல்வராக நயாப் சைனி வரும் 17-ம் தேதி பதவியேற்கிறார்
12 Oct 2024புதுடெல்லி : இரண்டாவது முறையாக அரியானா மாநிலத்தின் முதல்வராக நயாப் சிங் சைனி வரும் 17-ம் தேதி பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
விஜயதசமி: டார்ஜிலிங்கில் ராணுவ உபகரணங்களுக்கு பூஜை செய்த அமைச்சர் ராஜ்நாத் சிங்
12 Oct 2024டார்ஜிலிங் : விஜயதசமியை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் உள்ள சுக்னா கண்டோன்மென்ட்டில் ஆயுதங்களுக்கு பூஜை செய்தார்.
-
ரயில் விபத்துகளில் மத்திய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை : ராகுல் காந்தி குற்றச்சாட்டு
12 Oct 2024புதுடெல்லி : ரயில் விபத்துகளில் மத்திய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-10-2024.
12 Oct 2024 -
ஹெராயின், துப்பாக்கி கடத்திய பாகிஸ்தான் டிரோனை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படை
12 Oct 2024சண்டிகர் : பஞ்சாபின் பெரோஸ்பூரில், ஹெராயின், கைத்துப்பாக்கிகளை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் டிரோனை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
-
இஸ்ரேலுக்கு உதவி செய்ய வேண்டாம் : அரபு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை
12 Oct 2024டெக்ரான் : ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்த, எந்தவொரு சூழலிலும், இஸ்ரேலுக்கு உதவி செய்ய வேண்டாம் என அரபு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
அமெரிக்கர்களை கொல்லும் புலம்பெயர்ந்தோருக்கு மரண தண்டனை: டிரம்ப்
12 Oct 2024வாஷிங்டன் : அமெரிக்காவில் அமெரிக்கர்கள், பாதுப்புப் படையினரை கொலை செய்யும் புலம்பெயர்ந்தோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
-
மழைநீர் தேக்கத்துக்கு தீர்வு காண கோயம்பேடு மார்க்கெட்டில் கால்வாய் அமைக்க திட்டம் : அமைச்சர் சேகர் பாபு தகவல்
12 Oct 2024சென்னை : கோயம்பேடு மார்க்கெட்டில் மழைநீர் தேக்கத்துக்கு தீர்வு காண ரூ.15 கோடியில் கால்வாய் அமைக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
-
திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை ரயில் விபத்திற்கு 'சதி' காரணமா? என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேரில் விசாரணை
12 Oct 2024சென்னை, திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தின் பின்னணியில் ‘சதி திட்டம்’ ஏத
-
17,000 பேரை பணி நீக்கம் செய்ய போயிங் தொழிற்சாலை திட்டம்
12 Oct 2024நியூயார்க் : போயிங் விமான தொழிற்சாலையில் நடந்து வரும் வேலைநிறுத்தத்திற்கு மத்தியில், 17 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
-
தங்களது லட்சியத்தை அடைய போராடும் இந்திய பெண்கள் அமெரிக்க தூதர் பாராட்டு
12 Oct 2024வாஷிங்டன் : இந்தியாவில் உள்ள பெண்கள் லட்சியத்தை அடைய போராடுவார்கள் என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார்.
-
ஐப்பசி மாத பூஜை: சபரிமலை கோவில் நடை 16-ம் தேதி திறப்பு
12 Oct 2024சபரிமலை : ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வரும் 16-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
-
தமிழகத்தில் 10, 11, 12- ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியீடு: அமைச்சர்
12 Oct 2024சென்னை : தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை 14-ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் அறிவித்துள்ளார்.
-
சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்
12 Oct 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் நேற்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைந்தது.
-
உத்தரகாண்ட் சிறையில் நடந்த நவராத்திரி விழா: ராம்லீலா நாடகத்தில் நடித்த 2 கைதிகள் தப்பியோட்டம்
12 Oct 2024ஹரித்வார் : நவராத்திரி விழாவை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் சிறையில் நடந்த ராம்லீலா நாடகத்தில் வானரங்களாக வேடமிட்டு நடித்த 2 கைதிகள் சீதையை தேடுவதுபோல் நைசாக
-
ரயில் விபத்துகளை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
12 Oct 2024சென்னை : கவரப்பேட்டை அருகே ரயில் விபத்தால் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து விசாரித்த துணை முதல்வர் உதயநிதி
-
டி-20 போட்டியில் 2-வது அதிகபட்ச ரன்கள் : இந்திய அணி புதிய சாதனை
12 Oct 2024ஐதராபாத் : வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் சதமடித்து அசத்திய நிலையில், இந்திய அணி 297 ரன்களை பதிவுசெய்து டி-20 போட்டிகளில் 2-வது அதிகபட்ச
-
திருவள்ளூர் ரெயில் விபத்து: 13 பிரிவு அதிகாரிகளுக்கு தெற்கு ரெயில்வே சம்மன்
12 Oct 2024சென்னை : திருவள்ளூர் ரெயில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த 13 பிரிவு அதிகாரிகளுக்கு தெற்கு ரெயில்வே சம்மன் அனுப்பியுள்ளது
-
இலங்கை கடற்படையால் கடந்த 10 ஆண்டுகளில் 3,288 தமிழக மீனவர்களை கைது: தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்
12 Oct 2024ராமேசுவரம், இலங்கை கடற்படையால் கடந்த 10 ஆண்டுகளில் 3,288 தமிழக மீனவர்களை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல் தெரியவந்துள்ளது.