முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்முவில் பாக். ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூடு: பி.எஸ்.எப் வீரர் காயம்

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2024      இந்தியா
Kashmir 2024 08 13

ஜம்மு, எல்லைகளில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்முவின் அக்னூர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று  அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் எல்லை பாதுகாப்பு படை வீரர் காயமடைந்தார். இந்தத் தாக்குதலுக்கு பி.எஸ்.எப் வீரர்கள் பதிலடி கொடுத்தனர். என்றாலும், பாகிஸ்தான் தரப்பு உயிரிழப்புகள் குறித்து உடனடியாக தெரியவில்லை.

இதுகுறித்து எல்லை பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

நேற்று அதிகாலை 02.35 மணிக்கு அக்னூர் பகுதியில் எல்லைக்கு அப்பால் இருந்து எதிர்பாராத துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்தத் தாக்குதலுக்கு எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் பதிலடி கொடுத்தனர். பாகிஸ்தான் ராணுவத்தினரின் இந்தத் தாக்குதலில் ஒரு பி.எஸ்.எப். வீரர் காயமடைந்தார். ராணுவத்தினர் தயார் நிலையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே எல்லையில் போர்நிறுத்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்ட நிலையில், அது மீறப்படுவது எப்போதாவது மட்டுமே நடந்துள்ளது. கடந்த ஆண்டு ராம்கர் பகுதியில் பாகிஸ்தான் ரேஞ்சர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய தரப்பில் நடந்த முதல் உயிரிழப்பு இதுவாகும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து