முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடசென்னை அனல்மின் நிலையத்தில் வணிக ரீதியான உற்பத்தி விரைவில் தொடக்கம்

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2024      தமிழகம்
North-Chennai 2024-09-11

Source: provided

சென்னை : வடசென்னை - 3 அனல்மின் நிலையத்தில், வணிக ரீதியான உற்பத்தி விரைவில் தொடங்குவதற்கான இறுதிக் கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் 800 மெகா வாட் திறனில் வடசென்னை-3 அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. ரூ. 10,158 கோடி மதிப்பிலான இத்திட்டப் பணி கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கியது. இந்த மின் நிலையத்தில் பாய்லர், டர்பைன், ஜெனரேட்டர் நிறுவுதல் ஆகிய முக்கியப் பணிகளை பி.ஹெச்.இ.எல். நிறுவனமும், நிலக்கரி, சாம்பல் கட்டமைப்புப் பணிகளை தனியார் நிறுவனமும் மேற்கொண்டன. இங்கு கடந்த 2020 - 21ம் ஆண்டே மின் உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டது.

ஆனால், பல்வேறு காரணங்களால் இப்பணி தாமதமாகி கடந்த மார்ச் 7-ம் தேதி தான் சோதனை மின்னுற்பத்தி தொடங்கியது. தினமும் சராசரியாக 250 மெகா வாட் மின்னுற்பத்தி செய்யப்பட்ட நிலையில், ஜுன் 27-ம் தேதி முழு திறனான 800 மெகா வாட் மின்னுற்பத்தி செய்யப்பட்டது. பின்னர் அது குறைக்கப்பட்டு தினசரி 500 முதல் 600 மெகா வாட் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.

ஒரு மின் நிலையத்தில் சோதனை உற்பத்தி தொடங்கிய பிறகு தொடர்ந்து 72 மணி நேரம் முழு உற்பத்தி செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து தான் மின் நிலையம் வணிக ரீதியாக செயல்பட தொடங்கியதாக அறிவிக்கப்படும். ஆனால் வடசென்னை-3 மின் நிலையத்தில், சோதனை உற்பத்தி தொடங்கி 5 மாதங்கள் ஆகியும் வணிக உற்பத்தி தொடங்கப்படவில்லை.  இது குறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 

மின்வாரியத்துக்கு சொந்தமான ஆறு மின் நிலையங்களில் வடசென்னை-3 தான் அதிக திறன் கொண்டது. மிகப்பெரிய கட்டமைப்பை கொண்ட இந்த மின் நிலையத்தில் ஒவ்வொரு சாதனங்களையும் பரிசோதிக்க வேண்டி உள்ளது. இதனால், மின்னுற்பத்தி தொடங்கிய நிலையில் சில பிரச்சினைகள் கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டு வரப்படுகிறது. தற்போது அனைத்து சோதனைகளும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் விரைவில் வணிக உற்பத்தி தொடங்கப்படும் என்று  கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து