முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில அளவிலான கவிதைப்போட்டி: வெற்றி பெற்றோருக்கு பரிசு தொகை: அமைச்சர் பொன்முடி வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2024      தமிழகம்
Ponmudi 2024-09-13

Source: provided

சென்னை : பாரதியார் நூற்றாண்டை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற மாநில அளவிலான கவிதை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு தொகையினை அமைச்சர் பொன்முடி நேற்று வழங்கினார். 

இது குறித்து தமிழ்நாடு செய்தி, மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

மகாகவி பாரதியாரின் நூற்றாண்டை நினைவுகூரும் வகையில் தமிழக முதல்வரால் 2021-ம் ஆண்டு முதல் கல்லூரி மாணாக்கர்கள் இடையே மாநில அளவிலான கவிதைப் போட்டி நடத்தி முதல் இடம் பிடிக்கும் தலா ஒரு மாணவனுக்கும், மாணவிக்கும் பாரதி இளம் கவிஞர் என்ற விருதுடன் தலா ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி அரசாணை  வெளியிடப்பட்டு உயர்கல்வித் துறையால் ஆண்டுதோறும் கல்லூரி மாணாக்கர்களுக்கு இடையிலான மாநில அளவிலான பாரதி இளம் கவிஞர் கவிதைப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. 

2023-24 ஆம் ஆண்டுக்கான பாரதி இளம் கவிஞர் கவிதைப் போட்டி மாநில அளவில் நடத்தப்பட்டு மாணவர் பிரிவில் பழனி, அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி மாணவர்  முகமது அன்சாரி முதலிடம் பிடித்தார். 

அதே போல் மாணவியர் பிரிவில் சேலம், புனித சூசையப்பர் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவி  நிவேதா முதலிடம் பிடித்தார். இவர்களுக்குப் பாரதி இளம் கவிஞர் விருதும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர்  பொன்முடியால் நேற்று வழங்கப்பட்டது இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து