முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் இன்று அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம்

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2024      உலகம்
Sri-Lanka 2024-03-20

Source: provided

கொழும்பு : இலங்கையில் இன்று சனிக்கிழமை அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வந்த இலங்கை, சர்வதேச நாணய நிதியம் மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உதவியுடன் மெல்ல மெல்ல சிக்கலில் இருந்து மீண்டு வருகிறது. சுற்றுலாப்பயணிகள் வருகை உள்ளிட்ட பல காரணங்களால் அந்த நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பும் உயர்ந்து வருகிறது. 

இந்த நிலையில் இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் நடந்து வந்த தேர்தல் பிரச்சாரம் கடந்த 18-ம் தேதி மாலையுடன் ஓய்ந்தது. கடைசி நாள் பிரச்சாரத்தில் அதிபர் வேட்பாளர்கள் அனைவரும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதிலும் 11 பிரச்சார பொதுக்கூட்டங்கள் பிரம்மாண்டமாக நடைபெற்றன. 

இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, களம் இறங்கியுள்ளார். இடதுசாரி அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவர் அனுரா குமாரா திசநாயகே, தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார். 

இவர்கள் 3 பேருக்கும் இடையே மும்முனை போட்டி நிலவும் நிலையில், வெற்றி யாருக்கு என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். எனினும் அவருக்கு பெரிய அளவில் ஆதரவு காணப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து