முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷகிப் அல் ஹசன் ஓய்வு

வியாழக்கிழமை, 26 செப்டம்பர் 2024      விளையாட்டு
26-Ram-58-1

Source: provided

பிரபல வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் டி20, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதாகும் ஷகிப் அல் ஹசன் 129 சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வங்கதேச அணிக்காக விளையாடி 2,551 ரன்களும் 149 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். 70 டெஸ்ட்டில் 4,600 ரன்களும் 242 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் ஷகிப் ஓவரில் அதிரடியாக ரன்கள் குவித்தார். அறுவைச் சிகிச்சை காரணமாக மோசமாக பந்துவிசீய ஷகிப் 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் ஷகிப் கூறியதாவது: நான் எனது கடைசி டி20 கிரிக்கெட்டினை டி20 உலகக் கோப்பையில் விளையாடினேன். இது குறித்து நான் தேர்வுக்குழுவுடன் பேசியிருக்கிறேன். 2026 உலகக் கோப்பைக்கு இப்போதிருந்தே தயாராக வேண்டும். வங்கதேச கிரிக்கெட் வாரியம் சரியான் ஆள்களை தேர்வு செய்யுமென நம்புகிறேன். எனது கடைசி டெஸ்ட் போட்டியாக கான்பூரில் நடக்கும் போட்டியில் விளையாட ஆசைப்படுகிறேன். அவர்கள் அதற்கு சம்மதம் தெரிவித்தார்கள். என்னை வங்கதேசம் அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்கிறார்கள். அது நடக்காவிட்டால் கான்பூர் டெஸ்ட் எனது கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என்றார்.

ரிஷப் பண்டுக்கு புகழாரம்

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்டுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். கடந்த 2022 அம் ஆண்டு இறுதியில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் பயங்கர கார் விபத்தில் சிக்கினார். அதன் பின், ஓராண்டுக்கும் மேலாக கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் உருவானது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரிஷப் பண்ட் மீண்டும் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்குத் திரும்பினார். அண்மையில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியும் அசத்தினார்.

கார் விபத்துக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் பயணத்தை தொடங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிஷப் பண்டுக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் புகழாரம் சூட்டியுள்ளனர். ரிஷப் பந்த மிகச் சிறந்த வீரர். அவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவராக இருக்க விரும்புகிறேன். கடந்த சில ஆண்டுகளாக அவர் பல கடினாமன சூழல்களைக் கடந்து வந்துள்ளார். அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியுள்ளது நம்பமுடியாத விதமாக உள்ளது. அவர் மிகவும் நேர்மறையாக இருக்கிறார். இன்னும் அவர் இளம் வீரரே. போட்டிகளை வென்று கொடுப்பதை அவர் விரும்புகிறார். அவர் மிகவும் ரிலாக்ஸாக இருக்கிறார். அவர் அழகாக எப்போதும் சிரிப்புடன் இருக்கிறார் என்று மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.

பாக். தொடரில் ஸ்டோக்ஸ்..?

தி ஹண்ட்ரட் தொடரில் சூப்பர் சார்ஜர்ஸ் அணியில் சிறப்பாக பந்துவீசிய பென் ஸ்டோக்ஸ், பேட்டிங்கின்போது 2 ரன்களில் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அவர் ரிட்டையர்டு ஹர்ட் ஆகி வெளியேற அவருக்குப் பதிலாக ஹாரி ப்ரூக் களம் கண்டார். போட்டி முடிவடைந்த பிறகு, பென் ஸ்டோக்ஸ் ஊன்றுகோல் வைத்து நடந்து வந்து வீரர்களிடம் கை குலுக்கினார். இதனையடுத்து, இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் ஆக.21இல் தொடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ஆலி போப் கேப்டனாக செயல்பட்டார்.

இதனையடுத்து, பாகிஸ்தானுக்கு சென்று 3 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி விளையாடவிருக்கிறது. அக்.7ஆம் தேதி தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் கலந்துகொள்வார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ( ஈசிபி ) தெரிவித்துள்ளது. 33 வயதாகும் பென் ஸ்டோக்ஸ் 105 டெஸ்ட்டில் 6,508 ரன்களும் 203 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தியுள்ளார். சிறந்த ஆல்ரவுண்டராக இருக்கும் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், “ஸ்கேன் செய்யப்பட்ட பென் ஸ்டோக்ஸுக்கு நேர்மறையான முடிவுகள் வந்துள்ளதால் அவர் குணமாகிவிட்டதாக தெரிகிறது. 6 வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட காயம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, பாகிஸ்தான் தொடருக்கு ஆயுத்தமாகுகிறார்” என்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து