முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி: தகுதி பெற இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள்

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2024      விளையாட்டு
Indian-team 2023-10-30

Source: provided

கான்பூர் : கான்பூர் டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்படுவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுவதற்கான போட்டியை கடினமாக்கியுள்ளது.

2-0 என்ற கணக்கில்...

வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி 71.67 சதவிகித வெற்றிகளுடன் முதலிடத்தில் வலுவாக உள்ளது. தனது இடத்தை மேலும் வலுவாக்கிக் கொள்ள இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்ற வேண்டும்.

2-ம் நாள் ஆட்டம்...

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி (செப்டம்பர் 27) கான்பூரில் தொடங்கியது. முதல் நாளில் மழையால் ஓவர்கள் முழுமையாக வீசப்படமால், 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. முதல் நாளில் வங்கதேச அணி 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்திருந்தது. இந்த சூழலில் நேற்று 2-ம் நாள் ஆட்டம் மழையினால் கைவிடப்பட்டது.

இறுதிப்போட்டி...

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் மீதமுள்ள 8 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றால், இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுவிடலாம். ஆனால், போட்டி டிரா அல்லது வங்கதேசம் வெற்றி பெறும் பட்சத்தில், இந்திய அணி 8 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற சூழல் உருவாகும். 

காத்திருக்கும் சவால்...

இரண்டாவது டெஸ்ட் போட்டி தோல்வியிலோ அல்லது டிராவிலோ முடிந்தால், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற பல சவால்களை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பாக 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் தொடரிலும் விளையாடவுள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் தோல்வியிலோ அல்லது டிராவிலோ முடிந்தால், இந்திய அணி இந்த 8 போட்டிகளில் 5 வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கடினமான சூழலே உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து