முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தில் ராஜா விமர்சனம்

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2024      சினிமா
Dil-Raja-Review 2024-03-30

Source: provided

ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான நாயகன் விஜய் சத்யா, தனது மகளின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும் போது, எதிர்பாராத பிரச்சனை ஒன்றில் சிக்கிக் கொள்கிறார். ஒரு பக்கம் வில்லன் கோஷ்ட்டி துரத்த மறுபக்கம் காவல்துறை தேடுகிறது

இதனால் வாழ்வா...சாவா... என்ற நிலையில் ஓடிக்கொண்டிருக்கும் விஜய் சத்யா, அதில் இருந்து எப்படி மீள்கிறார் என்பதை கமர்ஷியலாகவும், திரில்லராகவும் சொல்லி இருக்கும் படம் தான் தில் ராஜா. இயக்குநர் ஏ.வெங்கடேஷ் தனது பலமான கமர்ஷியல் ஃபார்மூலாவை கையில் எடுத்து பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக மட்டும் இன்றி திரில்லர் அனுபவத்தையும் கொடுத்திருக்கிறார். நாயகனாக நடித்திருக்கும் விஜய் சத்யா, ஆறடி உயரம், சிக்ஸ் பேக் உடல் என்று அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவாக அமர்க்களப்படுத்துகிறார்.

விஜய் சத்யாவின் மனைவியாக வரும் ஷெரின், அமைச்சராக நடித்திருக்கும் இயக்குனர் ஏ.வெங்கடேஷ் அவரது மனைவியாக வரும் வனிதா விஜயகுமார். போலீஸ் அதிகாரியாக அசத்தியிருக்கும் சம்யுக்தா, விஜய் டிவி பாலா ஆகியோர் தங்களின் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். அம்ரீஷ் இசையில் வரும் முதல் பாடல் செம்ம... நடன இயக்குனருக்கு பாராட்டுக்கள். மொத்தத்தில், இந்த ‘தில் ராஜா’ நிச்சயம் ஜெயிப்பார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து