முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடீஸ்வரர்களுக்கு உதவவே பா.ஜ.க. அரசு நடத்தப்படுகிறது: ராகுல் காந்தி விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2024      இந்தியா
Rahul 2024-09-09

சோனிபட், நாட்டின் இரண்டு, மூன்று கோடீஸ்வரர்களுக்கு உதவுவதற்காக மட்டுமே பா.ஜ.க. அரசு நடத்தப்படுகிறது என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

அரியானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சோனிபட் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில்  காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பேசியதாவது, 

நாட்டில், குறிப்பாக அரியானாவில் சிறுதொழில்கள் நலிந்து விட்டதாக மக்கள் கூறுகிறார்கள். அரியானா அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் சிறு தொழில் செய்பவர்களை நாசப்படுத்தி விட்டனர். பணமதிப்பிழப்பு மற்றும் தவறான ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தி வங்கிகளின் கதவுகளை பிரதமர் மோடி மூடிவிட்டார். 

அவர்கள் அதானி, அம்பானிக்கு மட்டுமே நன்மை செய்ய விரும்புகிறார்கள்.  இரண்டு, மூன்று கோடீஸ்வரர்களுக்கு உதவுவதற்காக மட்டுமே பா.ஜ.க. அரசு நடத்தப்படுகிறது என்பது நாடு முழுவதும் தெரியும். அரியானா மக்கள் ராணுவத்தில் சேர்வது வழக்கம். ஆனால், நரேந்திர மோடி அக்னிவீர் திட்டம் கொண்டு வந்ததன் மூலம் இந்த பாதையையும் மூடிவிட்டார். 

அக்னிவீர் திட்டம் என்பது இந்திய வீரர்களிடமிருந்து ஓய்வூதியம், கேன்டீன் மற்றும் தியாகி அந்தஸ்து ஆகியவற்றை திருடுவதற்கான ஒரு வழியாகும். அரியானாவில் போதைப்பொருள் பிரச்சினை அதிகரித்து வருகிறது. 

நான் பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்க விரும்புகிறேன், அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான கிலோ போதைப்பொருள் சிக்கிய போது, ​​நீங்கள் யாரைப் பிடித்தீர்கள், யாரை சிறைக்கு அனுப்பினீர்கள்?

அரியானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஒரு சிலிண்டர் ரூ.500-க்கு கிடைக்கும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 25 லட்சம் வரை இலவசமாக மருத்துவ சிகிச்சைப் பெற்றுக் கொள்ளும் வகையில் காப்பீடு வழங்கப்படும். பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,000 வழங்கப்படும்.

இந்தியாவின் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்கு என்ன கிடைத்ததோ அது அரசியலமைப்பின் பரிசு. ஆனால் பா.ஜ.க. எப்போதும் அரசியல் சாசனத்தை தாக்கி வருகிறது. ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நாட்டின் நிறுவனங்களை தங்கள் சொந்த மக்களைக் கொண்டு நிரப்புகிறார்கள். ​​

ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இடம் கொடுக்காமல் அவர்கள் அரசியல் சாசனத்தைத் தாக்குகிறார்கள். அரசியல் சாசனத்தை பா.ஜ.க. அழித்து விட்டது. அரசியலமைப்பை நாங்கள் பாதுகாக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து