முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் பணி புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கி மே. வங்க பயிற்சி மருத்துவர்கள்

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2024      இந்தியா
Doctors 2024-10-01

Source: provided

கொல்கத்தா : பணியிடத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மேற்கு வங்கத்தின் பயிற்சி இளநிலை மருத்துவர்கள் நேற்று காலை முதல் மீண்டும் முழு பணி புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

 மருத்துவமனையின் பாதுகாப்பு, மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மருத்துவர்களை அச்சுறுத்தும் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை முன்வைத்து மீண்டும் இளநிலை பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.

இது குறித்து மேற்கு வங்க இளநிலை பயிற்சி மருத்துவர்கள் முன்னணி வெளியிட்ட அறிக்கையில், 

இன்று (நேற்று) முதல் மீண்டும் முழு பணிப் புறக்கணிப்பில் ஈடுபட நாங்கள் நிர்பந்திக்கப்பட்டுள்ளோம். அரசாங்கத்திடமிருந்து எங்களின் பாதுகாப்பு, நோயாளிகளுக்கான சேவைகளை தரம் உயர்த்தல், மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பாக தெளிவான, உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் வரை முழு வீச்சில் போராட்டத்தை நடத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து