முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிக முறை தொடர் நாயகன் விருது: முரளிதரனின் சாதனையை சமன் செய்தார் அஸ்வின்

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2024      விளையாட்டு
Ashwin 1

Source: provided

கான்பூர் : வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இதன் மூலம்

தொடர் நாயகன் விருது... 

இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நடந்தது.  இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது. வங்காளதேசத்திற்கு எதிரான 2வது ஆட்டத்தின் ஆட்ட நாயகன் விருது ஜெய்ஸ்வாலுக்கும், இந்த தொடரின் தொடர் நாயகன் விருது ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும் வழங்கப்பட்டது. 

மாபெரும் சாதனை... 

இந்த தொடருக்கான தொடர் நாயகன் விருதை வென்றதன் மூலம் அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முத்தையா முரளிதரனின் மாபெரும் சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார். அதாவது, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்ற வீரர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் (11 முறை *) முதல் இடத்தில் உள்ள முத்தையா முரளிதரனை (11 முறை) சமன் செய்துள்ளார்.

அதிக முறை தொடர் நாயகன் விருது:

1) முத்தையா முரளிதரன் - 11 முறை.

2) ரவிச்சந்திரன் அஸ்வின் - 11 முறை.

3) ஜாக் காலிஸ் - 9 முறை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து