முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2024      விளையாட்டு
South-Africa 2024-05-15

Source: provided

வங்கதேச டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசம்- தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் அக்டோபர் இறுதியில் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.ஒரு ஆண்டுக்குப் பிறகு சுழற்பந்துவீச்சாளர் செனுரன் முத்துசாமி அணிக்குத் திரும்பியுள்ளார். ஏற்கனவே, அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் கேசவ் மஹராஜ் மற்றும் டேன் பெய்ட் இருவருடன் வலுவான சுழல் கூட்டணியில் இணைந்துள்ளார் செனுரன் முத்துசாமி.30 வயதான ஆல்-ரவுண்டர் செனுரன் முத்துசாமி கடைசியாக 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அணியில் இடம்பெற்றிருந்தார். அதன் பின்னர் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். 

இந்த அணியில் அனுபவமில்லாத வீரராக மேத்யூ ப்ரீட்ஸ்கே சேர்க்கப்பட்டுள்ளார். அக்டோபர் 21 ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடருக்கான அணியை தெம்பா பவுமா தலைமைத் தாங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடருக்கான முதல் போட்டி வங்கதேச தலைநகர் டாக்காவிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நடைபெறவுள்ளது. தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணி: தெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், மேத்யூ ப்ரீட்ஸ்கே, நான்ட்ரே பர்கர், டோனி டி ஜோர்ஜி, கேசவ் மஹராஜ், எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, டேன் பேட்டர்சன், டேன் பீட், ககிசோ ரபாடா, ரியான் ஆர் ஸ்டப்ஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெரினே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து