முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொலைபேசி மூலம் ரஜினியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி

புதன்கிழமை, 2 அக்டோபர் 2024      இந்தியா
Modi 2024-06-10

சென்னை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார். இது தொடர்பாக லதா ரஜினிகாந்த் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி உள்ளார்.

முன்னதாக, மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட மருத்துவ செய்திக் குறிப்பில், ரஜினிகாந்த் செப்டம்பர் 30-ம் தேதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்திலிருந்து வெளியேறும் பிரதான ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சை இல்லாத டிரான்ஸ்கேட்டர் முறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மூத்த இதயவியல் மருத்துவர் சாய் சதீஷ், ரஜினியின் இதயத்தில் ஸ்டன்ட் பொறுத்தியுள்ளார்.

திட்டமிட்ட படி அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுள்ளது என்பதை ரஜினி ரசிகர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். ரஜினி நலமுடன் உள்ளார். இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் அடுத்த மூன்று வார காலம் ஓய்வில் இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்  தொலைபேசி மூலம் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.  இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து லதா ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசினார். அப்போது ரஜினிகாந்த் விரைந்து குணம் பெற வேண்டுமென பிரதமர் மோடி தெரிவித்தார்”. எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து