முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டுப்பற்று கொண்டவர்கள் காங்கிரசில் மட்டுமே உள்ளனர்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி

புதன்கிழமை, 2 அக்டோபர் 2024      இந்தியா
Mallikarjuna-Karke 2023 02

புதுடெல்லி, நாட்டுப்பற்று கொண்டவர்கள் காங்கிரசில் மட்டுமே இருக்கிறார்கள் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

ஜம்முகாஷ்மீர் தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பிறகு நிதானித்து தமது பேச்சை தொடர்ந்த அவர், பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை உயிரோடு இருப்பேன் என்று பேசினார். கார்கேவுக்கு பதிலடி தந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, இது கண்டிக்கத்தக்க பேச்சு என்று கூறி இருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- மக்களுக்கான நலத்திட்டங்களை செய்வதற்காக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு தேசப்பற்று இல்லை என்பது அர்த்தமல்ல. நாட்டிற்கும், அரசியலமைப்பிற்கும் எதிராக உழைத்தது ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவினர்தான். எனவே அவர்கள் விமர்சனத்தை நான் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன். ஆங்கிலேயர்கள் முன் அடி பணிந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவில் உள்ளனர். நாட்டுப்பற்று கொண்டவர்கள் காங்கிரசில் மட்டுமே இருக்கிறார்கள் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து