எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு என துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினார் மனு பாக்கர். மேலும், ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். இந்நிலையில் நேற்று அரியானா தேர்தலில் முதல்முறையாக வாக்களித்தப்பின் பேட்டியளித்த மனு பாக்கர் கூறியதாவது., நமது நாட்டின் இளைஞர்களாக இருக்கும் நாம் வாக்களிப்பது நமது கடமை. உங்களுக்கு யார் சிறந்த தலைவராக, சிறந்த வேட்பாளராக தோன்றுகிறதோ அவர்களுக்கு வாக்களியுங்கள்.
நமது சிறிய முயற்சிதான் பெரிய இலக்குகளுக்கு வித்திடும். முன்னேற்றம் நமது கைகளில் இருக்கிறது. ஏனெனில் நாம் தேர்ந்தெடுக்கும் தலைவர்கள்தான் நமது கனவை நிறைவேற்றுவார்கள். நான் முதன்முதலாக வாக்களித்துள்ளேன். வாக்களிக்க நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். வாக்களித்தில் மகிழ்ச்சியும் அடைகிறேன் என்றார். தனது எக்ஸ் பக்கத்தில் இளைஞர்கள் அனைவரும் வாக்களிக்க கோரிக்கை விடுத்திருந்தார். விருது வென்ற மனு பாக்கர் இந்தியா முழுவதும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சென்னையிலும் ஒரு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
________________________________________________________________________
ஜெமிமாவுக்கு சிறந்த பீல்டர் விருது
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 160 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 161 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 102 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 58 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இந்திய அணி தோல்வியை தழுவியதால் அரையிறுதிக்கு முன்னேற எஞ்சிய 3 லீக் ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) ஒவ்வொரு தொடரின் (இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்) முடிவிலும், அந்த தொடரில் சிறப்பாக பீல்டிங் செய்யும் வீரர்/ வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதேபோல், ஐ.சி.சி. நடத்தும் தொடர்களில் ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் வீரர்/ வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்நிலையில், மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சிறப்பாக பீல்டிங் செய்த வீராங்கனை விருது இளம் வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ்-க்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
________________________________________________________________________
ஆஸ்திரேலிய வீரர் நம்பிக்கை
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.
இந்நிலையில், இம்முறை இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றுவோம் எனவும், என்னுடைய பேட்டிங் இடம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, அது பற்றி எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்சமயத்தில் உலகின் டாப் 2 அணிகள். கடந்த வருடம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நாங்கள் அவர்களை வீழ்த்தினோம். பார்டர் - கவாஸ்கர் கோப்பையை நாங்கள் வென்று 10 வருடங்கள் கடந்து விட்டது. இந்த வருடம் இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றுவோம் . இவ்வாறு அவர் கூறினார்.
________________________________________________________________________
சூர்யகுமார் குறித்து ஹர்பஜன்
இந்தியாவின் புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீர் பதவியேற்ற பின்னர் டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவும், துணை கேப்டனாக சுப்மன் கில்லும் நியமிக்கப்பட்டனர். அந்த நேரத்தில் இது எல்லோருக்குமே ஆச்சரியமாக இருந்தது. ஹர்திக் பாண்ட்யாவின் உடற்தகுதி காரணமாகவே அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில், சூர்யகுமார் யாதவை டி20 அணியின் கேப்டனாக கொண்டு வந்தபோது ஆச்சரியமும், ஏமாற்றமும் அடைந்தேன் என இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, சூர்யகுமார் யாதவை இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக கொண்டு வந்தபோது நான் ஆச்சரியமடைந்தேன். எனக்கு அந்த முடிவு ஏமாற்றமாகவும் இருந்தது. அவர் (பாண்ட்யா) டி20 அணியின் துணை கேப்டனாக இருந்தார். ரோகித் சர்மா ஓய்வு பெற்றதும் அவர் இயல்பாக கேப்டனாக வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
________________________________________________________________________
கால்பந்து வீரருக்கு அபராதம்
இங்கிலாந்தில் பிரெஸ்டன்-பிளாக்பர்ன் அணிகள் இடையே நடந்த கால்பந்து போட்டியின் போது எதிர் அணி வீரரை கடித்ததற்காக கால்பந்து வீரர் மிலுடின் ஒஸ்மாஜிக்கு 8 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு ரூ.16 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பிரெஸ்டன் வீரரான மிலுடின் ஒஸ்மாஜிக் கடந்த 22-ந்தேதி நடந்த ஆட்டத்தில் பிளாக்பர்ன் பின்கள வீரர் ஓவன் பெக்கை கடித்ததாக தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டு உள்ளார். அவர் கடிக்கப்பட்டதாக நடுவர் மாட்டோனோ ஹூவிடம் பெக் கூறிய போதிலும், இந்தச் சம்பவத்திற்காக மிலுடின் ஒஸ்மாஜிக் ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்படவில்லை. போட்டியின் போது இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
புதுக்கோட்டையில் அருகே திடீரென சாலையில் இறங்கிய விமானத்தால் திடீர் பரபரப்பு
13 Nov 2025புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கீரனூர் - நார்த்தமலை சாலையில் விமானம் ஒன்று சாலையில் தரையிறக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-11-2025
13 Nov 2025 -
நெல்லையில் வருகிற 21-ம் தேதி கடலம்மா மாநாடு: சீமான் தகவல்
13 Nov 2025நெல்லை, நெல்லையில் வருகிற 21-ந்தேதி கடலம்மா மாநாடு நடைபெறும் என்று சீமான் அறிவித்துள்ளார்.
-
ஆண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுமா..? தமிழக அரசு விளக்கம்
13 Nov 2025சென்னை, ஆண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுமா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.;
-
ஒரு பவுன் தங்கம் விலை ரூ.95 ஆயிரத்தை கடந்தது ஒரே நாளில் ரூ.2,400 உயர்வு
13 Nov 2025சென்னை, தங்கம் விலை நேற்று 2-வது முறை உயர்ந்து விற்பனையானது.
-
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு வழக்கு: டெல்லி உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு
13 Nov 2025புதுடெல்லி, பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு தொடர்பான வழக்கில் டெல்லி ஐகோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
கனடாவில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல்
13 Nov 2025புதுடெல்லி: கனடாவில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீர் வெடிகுண்டு மிரட்டலை அடுத்து டெல்லியில் தடையிறக்கப்பட்டது.
-
மகளிர் உரிமைத் தொகை பெற உதவுங்கள்: தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்
13 Nov 2025சென்னை: போடிநாயக்கனூர், சாத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்பொழுது, மகளிர் உரிமை தொகை பெற தி.மு.க.
-
ராசிபுரம் கல்லூரியில் டைடல் பார்க்: அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
13 Nov 2025சென்னை, ராசிபுரம் கல்லூரியில் டைடல் பார்க் அமைப்பதை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடந்த உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
மேகதாது அணை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவு அதிர்ச்சி அளிக்கிறது: எடப்பாடி பழனிசாமி
13 Nov 2025சென்னை, மேகதாது அணை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு அதிர்ச்சி அளிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
வந்தே மாதரம் பாட மறுத்த அரசு ஆசிரியர் சஸ்பெண்ட்
13 Nov 2025லக்னோ: உத்தர பிரதேசத்தில் வந்தே மாதரம் பாட மறுத்த அரசுப் பள்ளி ஆசிரியரை கல்வித்துறை அதிகாரி ராகேஷ் குமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
-
பீகாரில் 243 தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை
13 Nov 2025பாட்னா, பீகார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு 243 தொகுதிகளில் பதிவான வாக்குக்கள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவுள்ளன.
-
முக்கிய மசோதாவில் கையெழுத்திடார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்..! 43 நாட்கள் அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது
13 Nov 2025வாஷிங்டன்: மசோதாவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்ட நிலையில் அமெரிக்காவில் 43 நாட்கள் அரசு முடக்கம் முடிவுக்கு வந்துள்ளது.
-
அப்பாவிகள் கொடூரமாக கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: காஷ்மீர் முதல்வர்
13 Nov 2025ஸ்ரீநகர்: அப்பாவிகள் கொடூரமாக கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என உமர் அப்துல்லா தெரிவித்தார்.
-
தமிழகத்தில் வரும் 16-ம் தேதி முதல் மீண்டும் தொடர் மழைக்கு வாய்ப்பு
13 Nov 2025சென்னை, அடுத்தடுத்து 3 உருவாகும் 3 புயல் சின்னங்களால் தமிழகத்தில் வரும் 16-ம் தேதி முதல் மீண்டும் தொடர் மழைக்கு வாய்ப்புள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
13 Nov 2025சென்னை, தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 55 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2025 முதல் 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டால
-
மெட்ரோ ரயில் திட்டப்பணிகள்: ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் ஆய்வு
13 Nov 2025சென்னை: மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளை ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் ஆய்வு செய்தனர்.
-
உலக அளவில் காலநிலை ஆபத்து குறியீட்டில் இந்தியா 9-வது இடம்
13 Nov 2025பெலெம்: உலக அளவில் காலநிலை ஆபத்து குறியீட்டில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மேலும் 3 சட்ட மசோதாக்களுக்கு தமிழ்நாடு கவர்னர் ரவி ஒப்புதல்
13 Nov 2025சென்னை: தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மேலும் 3 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
-
ட்ரம்ப் - சிரிய அதிபர் சந்திப்பு
13 Nov 2025நியூயார்க்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - சிரிய அதிபர் சந்தித்து பேசினார்.
-
குஜராத் மாநிலம் பரூச் மாவட்ட மருந்து தயாரிப்பு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி
13 Nov 2025காந்தி நகர்: மருந்து தயாரிப்பு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
டெல்லியில் நடந்தது பயங்கரவாத தாக்குதல்தான்: அமெரிக்கா கருத்து
13 Nov 2025வாஷிங்டன்: டெல்லியில் தெளிவான பயங்கரவாத தாக்குதல் அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ கருத்து தெரிவித்துள்ளார்.
-
ஹால்டிக்கெட்எடுப்பதில் சிரமம்: தேர்வு எழுதுபவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மாற்று ஏற்பாடு
13 Nov 2025சென்னை: ஹால்டிக்கெட் எடுப்பதில் தேர்வர்கள் சிரமத்தை பொக்க ஆசிரியர் தேர்வு வாரியம் மாற்று ஏற்பாடு செய்துள்ளது.
-
பிரான்ஸ் முன்னாள் அதிபர் விடுதலை
13 Nov 2025பாரிஸ்: பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
-
தென் அமெரிக்காவில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 37 பேர் பலி
13 Nov 2025லிமா: தென் அமெரிக்கா பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.


